பக்கம் எண் :

802

2257.







திருவளருங் கழுமலமே கொச்சை
     தேவேந்திரனூர் அயனூர்தெய்வத்
தருவளரும் பொழிற்புறவஞ் சிலம்பனூர்
     காழிதகு சண்பையொண்பா
வுருவளர்வெங் குருப்புகலி யோங்குதராய்
     தோணிபுர முயர்ந்ததேவர்
வெருவவளர் கடல்விடம துண்டணிகொள்
     கண்டத்தோன் விரும்புமூரே.         2
 2258.



வாய்ந்தபுகழ் மறைவளருந் தோணிபுரம்
     பூந்தராய் சிலம்பன்வாழூர்
ஏய்ந்தபுற வந்திகழுஞ் சண்பையெழிற்
     காழியிறை கொச்சையம்பொன்


அமைந்திருத்தல் அறிதற்பாலது. மேற்சோலை வளம் கவரும் தோணிபுரம்
என்றது. உயர்ந்தோங்கிய சோலைகளினும் மேலோங்கி விளங்குவதால்,
சோலை வளத்தைத் தோணிமலை கவர்ந்து திகழ்வதாயிற்றென்றபடி.
இளங்குமரன் - முருகக் கடவுள், பாலசுப்பிரமணியர். பெற்று - ஐந்து
முகத்தோடு அதோமுகமும் கொண்டு. சேந்தனை முன் பயந்துலகில்
தேவர்கள் தம்பகை கெடுத்தோன் திகழுமூரே. (தி.2. ப.210. பா.6). பகை -
பகையாய அசுரர்களை எறிவித்த - எறியச் செய்த. பெய ரெச்சத்தகரம்
தொக்கது.

     2. பொ-ரை: பாற்கடலைக் கடையும்காலத்து உயர்ந்த தேவர்கள்
அஞ்சப் பெருகி எழுந்த நஞ்சினை உண்டு அழகிய கண்டத்தோனாகிய
சிவபிரான் விரும்பும் ஊர், திருமகள் வளரும் கழுமலம் முதலான
பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.

     கு-ரை: அயனூர் - பிரமபுரம். தெய்வத்தரு - கல்பக விருக்ஷாதி.
சிலம்பனூர் - சிரபுரம். நாகநாதசுவாமியைச் சிலம்பன் என்றருளினார்
போலும். நாகம் - மலை. ஒள்பா உருவளர் - அறிவொளியுடைய
அருட்பாக்கள் வடிவில் வளர்கின்ற. வெருவ - அஞ்சியலற.

     3. பொ-ரை: சிவபிரான் நாள்தோறும் எழுந்தருளிய ஊர், புகழ்
பெற்றதும் வேதங்கள் வளர்வதுமான தோணிபுரம் முதலான பன்னிரு
திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.