பக்கம் எண் :

803

வேய்ந்தமதிற் கழுமலம்விண் ணோர்பணிய
     மிக்கயனூர் அமரர்கோனூர்
ஆய்ந்தகலை யார்புகலி வெங்குருவ
     தரனாளும் அமருமூரே.            3
 2259.







மாமலையாள் கணவன்மகிழ் வெங்குருமாப்
     புகலிதராய் தோணிபுரம்வான்
சேமமதில் புடைதிகழுங் கழுமலமே
     கொச்சைதேவேந் திரனூர்சீர்ப்
பூமகனூர் பொலிவுடைய புறவம்விறற்
     சிலம்பனூர் காழிசண்பை
பாமருவு கலையெட்டெட் டுணர்ந்தவற்றின்
     பயன்நுகர்வோர் பரவுமூரே.        4
2260.



தரைத்தேவர் பணிசண்பை தமிழ்க்காழி
     வயங்கொச்சை தயங்குபூமேல்
விரைச்சேருங் கழுமலமெய் யுணர்ந்தயனூர்
     விண்ணவர்தங் கோனூர்வென்றித்


     கு-ரை: மறை - வேதம். சிலம்பன் வாழ்ஊர் - சிரபுரம். நாகநாத
சுவாமிகோயில்.

     4, பொ-ரை: பாக்களில் பொருந்திய அறுபத்து நான்கு
கலைகளையும் உணர்ந்து அவற்றின் பயனை நுகரும் அறிஞர்கள் போற்றும்
ஊர், மலையான் மகளாகிய பார்வதி தேவியாரின் கணவராகிய பெருமானார்
விரும்பும் வெங்குரு முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்
பதியாகும்.

     கு-ரை: மாமலையாள் - இமாசல குமாரியான உமாதேவியார். சேமம்
- காவல். பூமகனூர் - பிரமபுரம். பொலிவு - விளக்கம். விறல் -வலிமை,
வெற்றி. கலை எட்டெட்டு - அறுபத்து நான்கு கலைகள். நுகர்வோர் -
அநுபவிக்கும் அறிஞர்கள்.

     5. பொ-ரை: உலகின்கண் உயர்ந்தஊர், தரைத்தேவராகிய அந்தணர்
பணியும் சண்பை முதலான பன்னிருபெயர்களைப் பெற்ற சீகாழிப்பதியாகும்.