பக்கம் எண் :

804

திரைச்சேரும் புனற்புகலி வெங்குருச்
     செல்வம்பெருகு தோணிபுரஞ்சீர்
உரைச்சேர்பூந் தராய்சிலம்ப னூர்புறவ
     முலகத்தி லுயர்ந்தவூரே.            5
2261.







புண்டரிகத் தார்வயல்சூழ் புறவமிகு
     சிரபுரம்பூங் காழிசண்பை
எண்டிசையோ ரிறைஞ்சியவெங் குருப்புகலி
     பூந்தராய் தோணிபுரஞ்சீர்
வண்டமரும் பொழின்மல்கு கழுமலநற்
     கொச்சைவா னவர்தங்கோனூர்
அண்டயனூ ரிவையென்ப ரருங்கூற்றை
     யுதைத்துகந்த வப்பனூரே.           6
2262.



வண்மைவளர் வரத்தயனூர் வானவர்தங்
     கோனூர்வண் புகலியிஞ்சி
வெண்மதிசேர் வெங்குருமிக் கோரிறைஞ்சு
     சண்பைவியன் காழிகொச்சை


     கு-ரை: தரைத்தேவர் - பூசுரர், அந்தணர். தமிழ்க்காழி என்றதால்
ஸ்ரீகாளிபுரம் என்றதன் திரிபென்ற கூற்று ஆராயத் தக்கது. விரை -மணம்.
மெய் உணர்ந்த அயன் என்க. அயனூர் - பிரமபுரம். விண்ணவர்தம்
கோன்ஊர் - வேணுபுரம். திலை - அரை. உரை - (புகழ்) மொழி.

     6. பொ-ரை: வெல்லுதற்கு அரிய கூற்றுவனை உதைத்து உகந்த
சிவபெருமானது ஊர், தாமரை மலர்களால் நிறைந்த வயல்கள் சூழ்ந்த புறவம்
முதலான பன்னிரு திருப்பெயர்கள் பெற்ற சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: புண்டரிகத்து ஆர்வயல்-தாமரை மலர்களால் நிறைந்த கழனி.
இறைஞ்சிய - வணங்கிய. வானவர் கோனூர் - வேணுபுரம். அண்ட அயனூர்
- பிரமதேவனூர். பிரமபுரம். காலசங்காரகர்த்தா என்க.

     7. பொ-ரை: வெண்ணீறு பூசிப் பால் போன்ற நிறமுடையோனாகிய
சிவபெருமான் எழுந்தருளிய ஊர், கொடைத்தன்மை