பக்கம் எண் :

805

கண்மகிழுங் கழுமலங்கற் றோர்புகழுந்
     தோணிபுரம் பூந்தராய்சீர்ப்
பண்மலியுஞ் சிரபுரம்பார் புகழ்புறவம்
     பால்வண்ணன் பயிலுமூரே.          7
 2263.







மோடிபுறங் காக்குமூர் புறவஞ்சீர்ச்
     சிலம்பனூர் காழிமூதூர்
நீடியலுஞ் சண்பைகழு மலங்கொச்சை
     வேணுபுரங் கமலநீடு
கூடியவ னூர்வளர்வெங் குருப்புகலி
     தராய்தோணி புரங்கூடப்போர்
தேடியுழ லவுணர்பயி றிரிபுரங்கள்
     செற்றமலைச் சிலையனூரே.          8


நிரம்பியோர் வாழும் மேன்மையான பிரமபுரம் முதலான பன்னிரு
திருப்பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: வண்மை - கொடை. வரத்து - மேன்மையையுடைய. இஞ்சி -
மதில். மிக்கோர் - ஞானம், தவம், தொண்டு, பூஜை முதலியவற்றால்
மேம்பட்டவர்.

     கற்றோர் - சிவபிரானை வழிபடும் நெறியை உணர்ந்தோர்.
வேதாகமங்களைக் கற்றவர் எனலுமாம். பார் - உலகம்.

     8. பொ-ரை: போர் உடற்றத்தேடித் திரிந்த அவுணர்வாழும்
திரிபுரங்களைச் செற்ற சிவபிரானது ஊர், துர்க்கையால் காவல் செய்யப்
பெறும் புறவம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.

     கு-ரை: மோடி - துர்க்கை. புறங்காக்கும் - காவல் செய்யும். மோடி
புறங்காக்கும் ஊராகிய புறவம் என்க. (தி.2 ப.210 பா.8)

     சீர்ச்சிலம்பன் ஊர் - சிரபுரம். கமல நீடுகூடியவன் ஊர் - பிரமபுரம்.
(தாமரையில் வாழ்பவன்). போர். புரங்கள் செற்றமலை சிலையன் - திரிபுரத்
தசுரரை அழித்த மேருவில்லியாகிய சிவபிரான்.