2264.
|
இரக்கமுடை
யிறையவனூர் தோணிபுரம்
பூந்தராய் சிலம்பன்றன்னூர்
நிரக்கவரு புனற்புறவ நின்றதவத்
தயனூர்சீர்த் தேவர்கோனூர்
வரக்கரவாப் புகலிவெங் குருமாசி
லாச்சண்பை காழிகொச்சை
அரக்கன்விற லழித்தருளி கழுமலமந்
தணர்வேத மறாதவூரே. 9 |
2265.
|
மேலோதுங்
கழுமலமெய்த் தவம்வளருங்
கொச்சையிந் திரனூர்மெய்மை
நூலோது மயன்றனூர் நுண்ணறிவார்
குருப்புகலி தராய்தூநீர்மேல்
சேலோடு தோணிபுரந் திகழ்புறவஞ்
சிலம்பனூர் செருச்செய்தன்று
மாலோடு மயனறியான் வண்காழி
சண்பைமண்ணோர் வாழ்த்துமூரே. 10 |
9. பொ-ரை:
அந்தணர்களால் ஓதப்பெறும் வேதம் இடையறவு படாத
ஊர், கருணையே வடிவான சிவபிரானது தோணிபுரம் முதலான பன்னிரு
பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
இரக்கம் உடை இறையவன் - கருணையே உருவமாகிய
சிவபிரான். நிரக்க வருபுனல் என்றது நீரின் பெருக்கத்தையும் விரைவையும்
உணர்த்தும். தவத்து அயன் - தவத்தையுடைய பிரமன். புகல் என்றெண்ணி
வரக் கரவாத புகலி. மாசு - குற்றம். அரக்கன் -இராவணன். விறல் - வலி.
அருளி - சிவன்.
10. பொ-ரை:
உலகினுள்ளோர் வாழ்த்தும் ஊர், மேலானதாக
ஓதப் பெறும் கழுமலம் முதலான பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப்
பதியாகும்.
கு-ரை:
மெய்த்தவம் - உண்மைத் தவம்(தபசு). மெய்ம்மை நூல்
-சத்தியமான வேதங்கள், நுணி அறிவு ஆர் குரு - நுட்பமான அறிவு
பொருந்திய குரு, வெங்குரு. சேல் - மீனினம். செரு - போர்.
|