2266.
|
ஆக்கமர்சீ
ரூர்சண்பை காழியமர்
கொச்சைகழு மலமன்பானூர்
ஓக்கமுடைத் தோணிபுரம் பூந்தராய்
சிரபுரமொண் புறவநண்பார்
பூக்கமலத் தோன்மகிழூர் புரந்தரனூர்
புகலிவெங் குருவுமென்பர்
சாக்கியரோ டமண்கையர் தாமறியா
வகைநின்றான் றங்குமூரே. 11 |
2267.
|
அக்கரஞ்சேர்
தருமனூர் புகலிதராய்
தோணிபுர மணிநீர்ப்பொய்கை
புக்கரஞ்சேர் புறவஞ்சீர்ச் சிலம்பனூர்
புகழ்க்காழி சண்பைதொல்லூர் |
11. பொ-ரை:
சாக்கியர் சமணர்களால் அறியப் பெறாதவனாகிய
சிவபிரான் தங்கும் ஊர், ஆக்கம் மிக்க ஊராகிய சண்பை முதலான
பன்னிரு பெயர்களைப் பெற்ற சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
ஆக்கு - ஆக்கம். ஆக்கம்மிக்க ஊர் (தி.2 பா.210. பா.8).
(மன்று மன்றம் இன்பு இன்பம். நீட்டு நீட்டம். பாட்டு பாட்டம்
என்பவைபோல் அம்முப்பெற்றது). ஆக்கம் அமர் சீர் ஊர் என்க. அன்பான்
ஊர் - அன்புருவான சிவபிரான் ஊர். அன்பானூராகிய தோணிபுரம்.
அன்பே சிவம் கமலத்தோன் - பிரமதேவன். புரந்தரன் -இந்திரன். ஓக்கம்
- உயர்ச்சி. ஓங்குவது ஓக்கம்., நீங்குவது நீக்கம். தேங்குவது தேக்கம்.
அடங்குவது அடக்கம். தொடங்குவது தொடக்கம். பழக்கம், பழகு.
ஙகரவொற்றில்லை. இறக்கம் - இறங்கு ஙகர வொற்றிருக்கின்றது. பகுதியில்
அவ்வொற்றிருப்பினும் இன்றாயினும் வல்லொற்றுடைமை காண்க.
12. பொ-ரை:
புகழ்மிக்க தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன்
திருவருளில் திளைத்துச் சக்கரமாகச் சொன்ன இத்தமிழ் மாலையைப்
போற்றி நாவில் தரிப்போர் தவஞ்செய்தோர் ஆவர்.
கு-ரை:
அக்கரம் (அக்ஷரம்) - அழிவின்மை. க்ஷரம் - அழிவு.
அழியாத தருமனூர் என்றது வெங்குருவினை. தருமன் - இயமதருமன்
|