பக்கம் எண் :

808

மிக்கரஞ்சீர்க் கழுமலமே கொச்சைவயம்
     வேணுபுர மயனூர்மேலிச்
சக்கரஞ்சீர்த் தமிழ்விரகன் றான்சொன்ன
     தமிழ்தரிப்போர் தவஞ்செய்தோரே.   12

                      திருச்சிற்றம்பலம்


‘‘.......பூவைபாகன். அன்பழுத்தும் அறமகற்கு இவ்வருள் பழுத்து. . . .
பின்பழிச்சி ஒரு தருமன் தன் பதத்தின் இனிதிருக்கப் பெற்றான்” (சீகாழித்
தலபுராணம்) (தி.7. ப.38 பா.9). புக்கரம்-தாமரை. தொல்லூர்-(புராதனபுரி).
பழமையதாகிய ஊர். மிக்கரஞ்சீர்-மிக்கு அரன் சீர் என்றதாகக்
கொண்டுரைக்கலாம். நன்கு புலப்பட்டிலது. இச்சக்கரம் எனச்சுட்டியதால்,
இப்பதிகம் சித்திர கவியுள் ஒன்றான சக்கர பந்தம் என்றறிந்து முன்னோர்
தலைப்பிற் குறித்தனர்.

திருஞானசம்பந்தர் புராணம்

செந்தமிழ் மாலை விகற்பச் செய்யுட்க ளான்மொழி மாற்றும்
வந்தசொற் சீர்மாலை மாற்றும் வழிமொழி எல்லா மடக்குச்
சந்த வியமகம் ஏகபாதந் தமிழ்இ ருக்குக்குறள் சாத்தி
எந்தைக் கெழுகூற் றிருக்கை ஈரடி ஈரடி வைப்பு.

நாலடி மேல்வைப்பு மேன்மை நடையின் முடுகுமி ராகம்
சால்பினில் சக்கரம் ஆதி விகற்பங்கள் சாற்றும்
பதிக மூல இலக்கிய மாக எல்லாப் பொருள்களும் முற்ற
ஞாலத் துயர்காழி யாரைப் பாடினார் ஞானசம் பந்தர்.

-சேக்கிழார்.