பக்கம் எண் :

809

74. திருப்பிரமபுரம்

பதிக வரலாறு:

     முன் பதிக வரலாற்றைக் காண்க.

 திருக்கோமூத்திரி அந்தாதி

பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 210                             பதிக எண்.: 74

திருச்சிற்றம்பலம்

2268.







பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர்
     குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம்
     பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை
     புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர்
     கழுமலநாங் கருதுமூரே.            1
 2269.



கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த்
     தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா
     யுலகாருங் கொச்சைகாழி


     (இத் திருப்பதிகம் கோமூத்திரியாய் அந்தாதி அமைப்பில் விளங்குவது)

     1. பொ-ரை: நாம் கருதும் ஊர் பிரமபுரம் முதலான பன்னிரு
பெயர்களையுடைய கழுமலமாகும்.

     கு-ரை: பூமேல் மாமகளூர் வெங்குரு - திருமகள் பரவும் ஊராகிய
வெங்குரு, அவள் வாழும் ஊர் எனலுமாம், செல்வம் பற்றியது. இஞ்சி -
மதில். சேமம் - காவல். காமனை - மன்மதனை. நுதல் - நெற்றி.

     2. பொ-ரை: சடைமுடியை உடைய அண்ணலாகிய சிவபிரான் தங்கும்
ஊர் நல்ல, எண்ணமுடைய மறையவர் வாழும் கழுமலம்