|
திருத்திகழுஞ்
சிரபுரந்தே வேந்திரனூர்
செங்கமலத்
தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை
முடியண்ணல்
தங்குமூரே. 2 |
2270.
|
ஊர்மதியைக்
கதுவவுயர் மதிற்சண்பை
யொளிமருவு
காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த்
தோணிபுரங்
கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப்
புறவமய
னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங்
குருக்கங்கை
தரித்தோனூரே. 3 |
2271.
|
தரித்தமறை
யாளர்மிகு வெங்குருச்சீர்த்
தோணிபுரந்
தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந்
தராய்புகலி
யிமையோர்கோனூர் |
முதலான பன்னிரு பெயர்களை
உடைய காழிப்பதியாகும்.
கு-ரை:
கனகம் - பொன். திரு - இலக்குமி, அழகு. தரு - மரம்,
கற்பகம் முதலியவை.
3. பொ-ரை:
கங்கையைச் சடையில் தரித்த சிவபிரானது ஊர்
விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைத் தொடுமாறு உயர்ந்த மதில்களை
உடைய சண்பை முதலிய பன்னிருபெயர்களைக் கொண்ட சீகாழிப்
பதியாகும்.
கு-ரை:
ஊர்மதி - விண் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ - பற்ற.
கற்பத்தார் - கற்பகப்பூமாலை. தரித்தோன் - தாங்கியவன்.
4.
பொ-ரை: உலகில் விளங்கும் ஊர், வேதங்களை
நாவில் தரித்த
அந்தணர்கள் மிகுந்த வெங்குரு முதலிய பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்பதியாகும்.
|