|
வாய்ந்தபுற
வந்திகழுஞ் சிரபுரம்பூந்
தராய்கொச்சை
காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம்
பகைகெடுத்தோன்
றிகழுமூரே. 6 |
2274.
|
திகழ்மாட
மலிசண்பை பூந்தராய்
பிரமனூர்
காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம்
வயங்கொச்சை
புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங்
குருவெம்போர்
மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள்
பணிந்துலகி
னின்றவூரே. 7
|
2275.
|
நின்றமதில்
சூழ்தருவெங் குருத்தோணி
புரநிகழும்
வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி
சண்பைவளர்
புறவமோடி |
ஊர், கழுமலம் முதலிய
பன்னிரு பெயர்களைக் கொண்ட சீகாழிப்
பதியாகும்.
கு-ரை:
காய்ந்து - கோபித்து. காலனை - இயமனை. சேந்தனை
-முருகப்பிரானை. பயந்து - பெற்று. பகை - சூரன்படை. (பதி.209. பா.1.
பார்க்க).
7. பொ-ரை:
கொடியபோரில் மகிடாசுரனைக் கொன்று விளங்கும்
நீலியாகிய துர்க்கை சிவபிரான் அடியிணைகளைப் பணிந்து தனது
கொலைப் பழியைப் போக்கிக் கொண்டு நின்ற ஊர், விளங்கும்
மாடவீடுகளைக் கொண்ட சண்பை முதலிய பன்னிரு பெயர்களை உடைய
சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
மலி - மலிந்த, மிக்க. தேசு - ஒளி. மகிடற்செற்று
-மகிடாசுரனைக் கொன்று. மகிடம் - எருமைக்கடா. நீலி - மாயோள்,
(துர்க்கை) கறுப்பாயி.
8.
பொ-ரை: பூதங்களால் தாங்கப் பெறும் ஆக்கம்
மிக்க ஊர்,
நிலைத்துநின்ற மதில்களால் சூழப்பட்ட வெங்குரு முதலான பன்னிரு
|