|
சென்றுபுறங்
காக்குமூர் சிரபுரம்பூந்
தராய்புகலி
தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க
டாங்காக்க
மிக்கவூரே. 8 |
2276.
|
மிக்ககம
லத்தயனூர் விளங்குபுற
வஞ்சண்பை
காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம்
பூந்தராய்
சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி
வெங்குருவல்
லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ
டழித்துகந்த
வெம்மானூரே. 9 |
பெயர்களை உடைய சீகாழிப்
பதியாகும்.
கு-ரை:
மன்றில் - பொதியில், புறம் என்னும் பொருளதுமன்றில்
ஒன்று எனல்பொருந்து மேற்கொள்க.
மோடி
- துர்க்கை (தி.2 ப.209 பா.8). வென்றி - வெற்றி. பூதங்கள்
தாங்கும் ஆக்கம் மிக்க ஊர். (தி.2 ப.210 பா.11).
9. பொ-ரை:
வலிய அரக்கனாகிய இராவணனின் திண்ணிய
தோள்கள் இருபது, முடிகள் பத்து ஆகியவற்றின் பெருமையை அழித்த
எம்தலைவனாகியசிவபிரானது ஊர், அழகு மிக்க தாமரை மலர்மேல்
உறையும் பிரமனது தலம் என்பது முதலான பன்னிரு பெயர்களைக்
கொண்ட சீகாழிப்பதியாகும்.
கு-ரை:
தூ - தூய்மையுடைய. எல்லாவுயிர்க்கும் பற்றுக்கோடாகிய.
மை - மேகம். கருமையுமாம்.
பொழில்
- சோலை. அரக்கன் - இராவணன். ஈடு - வலிமை,
பெருமையுமாம். எம்மான் எம்பெருமான்.
|