2277.
|
எம்மான்சேர்
வெங்குருச்சீர்ச் சிலம்பனூர்
கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந்
தரனூர்நற் றோணிபுரம் போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய
னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய்
விளங்கியவெம் மிறைவனூரே. 10 |
2278.
|
இறைவனமர்
சண்பையெழிற் புறவமய
னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி
புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர்
கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள்
பரிசறியா வம்மானூரே. 11 |
10. பொ-ரை:
மேகம் போன்ற கரிய மேனியனாகிய திருமால்,
தாமரைமலர் மேல் உறையும் நான்முகன் ஆகியோர் உணராத வகையில்
தழல் உருவாய் நின்ற இறைவனது ஊர், எம் தலைவனாகிய சிவபிரான்
எழுந்தருளிய வெங்குருமுதலான பன்னிரு பெயர்களை உடைய சீகாழிப்
பதியாகும்.
கு-ரை:
பொய்ம்மாண்பிலோர் - மெய்ப்புகழுடையோர். புரந்தரன் -
இந்திரன். கைம்மா - துதிக்கையையுடைய யானை. காரின் மெய்மால் -
மேகம்போலும் திருமேனியையுடைய திருமால். பூமகன் - பிரமன். தழல் -தீ.
11. பொ-ரை:
ஒளியின்றி மயிரைப் பறித்தெடுத்த முண்டிதராய
அமண் கீழோர் சாக்கியர் ஆகியோரால் அறியமுடியாத தலைவராகிய
சிவபெருமானதுஊர், இறைவனமர் சண்பை முதலான பன்னிரு
பெயர்களை உடைய சீகாழிப் பதியாகும்.
கு-ரை:
இறைவன் - சிவபிரான். அமர் - விரும்பியெழுந்
|