பதிக
வரலாறு
137-ஆவது
பதிகத் தலைப்பைக் காண்க.
பண்:
காந்தாரம்
ப.தொ.எண்: 211
பதிக
எண்: 75
திருச்சிற்றம்பலம்
2280.
|
விண்ணியங்கு
மதிக்கண்ணி யான்விரி யுஞ்சடைப்
பெண்ணயங்கொள் திருமேனி யான்பெரு மானனற்
கண்ணயங்கொள் திருநெற்றி யான்கலிக் காழியுண்
மண்ணயங்கொண் மறையாள ரேத்துமலர்ப் பாதனே. 1 |
2281.
|
வலிய
காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்
பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்
கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்
நலிய வந்தவினை தீர்த்துகந்தவெந் நம்பனே. 2
|
1.
பொ-ரை: ஆரவாரம் நிறைந்த காழிப்பதியுள்,
உலகம் நலம் பெற
மறைவல்ல அந்தணர் ஏத்தும் மலர்போன்ற திருவடிகளை உடைய இறைவன்,
விண்ணில் இயங்கும் பிறைமதிக் கண்ணியன்; விரியும் சடையோடு
பெண்ணொரு பாகங்கொண்ட மேனியன்: பெரியோன்: அனல் விழியைக்
கொண்ட நெற்றியன்.
கு-ரை:
விண் இயங்கும் மதிக்கண்ணியான் - ஆகாயத்தில்
சஞ்சரிக்கும் திங்களாகிய தலைமாலையை அணிந்த சிவபிரான். பெண்
நயம் கொள் திருமேனியான் - அர்த்தநாரீசுவர வடிவினன். அனல் கண்
நயம்கொள் திருநெற்றியான் - நெருப்புக் கண்ணைக்கொண்ட அழகிய
நெற்றியை உடையவன். மண் நயம்கொள் - மண்ணோர் நலமாக்கொண்ட.
2.
பொ-ரை: வறுமை முதலியவற்றைத் தவிர்க்க வேள்வி
முதலியன
செய்யும் மறையவர் வாழும் சீகாழிப்பதியுள் நம்மை நலிய வரும்
வினைகளைத் தீர்த்து மகிழும் நம்பனாகிய இறைவன், வலிய காலன்
|