2282.
|
சுற்ற
லாநற்புலித்தோலசைத்தயன் வெண்டலைத்
துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்
கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுண்
மற்ற யங்குதிர டோளெம்மைந்தனவ நல்லனே. 3 |
2283.
|
பல்ல
யங்குதலை யேந்தினான்படு கானிடை
மல்ல யங்குதிர டோள்களாரநட மாடியுங்
கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுட்
தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே. 4 |
உயிரைப் போக்கியவன்;
உமையம்மையோடு கூடியிருப்பவன்: பலியேற்கும்
கையினை உடையவன்: மேலானவன்.
கு-ரை:
மடவாள் - உமாதேவியார். பரமேட்டியான் - தனக்கு
மேலான தொன்றில்லாத ஸ்தாநத்தையுடைய முழுமுதற் பொருள். ஆன்
விகுதி தமிழ் கலியை - வறுமை முதலிய துன்பங்களை. உகந்த - உயர்ந்த.
எம் நம்பன் - எம் விருப்பாயுள்ளவன்.
3. பொ-ரை:
கல்வி கேள்விகளில் வல்ல பெரியோர் வாழும்
காழிப்பதியுள் மற்போர் செய்யத்தக்க திரண்ட தோள்களை உடைய
வலியோனாகிய சிவபிரான் நல்லன். புலித்தோலை இடையிற்சுற்றிப்
பிரமனது தலையோட்டில் உண்பலிதேரும் இயல்பினன்.
கு-ரை:
சுற்றல் ஆம் புலித்தோல்:- சுற்றுதல் - அரையிற் சுற்றி
உடுத்தல். அசைத்து - கட்டி. துற்றல் - உண்ணல். சுடுநீறு - (தி.2 ப.214
பா.2.) மல் - வலிமை. தயங்கு - விளங்குகின்ற. மைந்தன் - வலியன், வீரன்.
4.
பொ-ரை: கற்களையும் அசையச்செய்யும் கடல்
அலை நீர் சூழும்
காழிப்பதியுள் பழமையாகப் பரவிய புகழ் விரும்பிச்சேர்தற்கு உரிய ஒளி
வண்ணனாகிய சிவபிரான், பற்கள் விளங்கும் தலையோட்டை ஏந்தியவன்:
பலரும் இறந்தபின் எரிக்கப்படும் சுடுகாட்டில், மற்போருடற்ற வல்ல திரண்ட
தோள்கள் அசைய நடனம் ஆடுபவன்.
கு-ரை:
அயங்கு - அசங்கிய, நிலைகுலைந்த, (தி.2 ப.140. பா.3).
மல். . . . தோள்-வலிமையால் அசைந்த தோள். மற்றயங்குதிரடோள்
என்றதை மேற்பாட்டிற் காண்க. தோள்கள் ஆர
|