2284.
|
தூநயங்கொடிரு
மேனியிற் பொடிப்பூசிப்போய்
நாநயங்கொண்மறை யோதிமா தொருபாகமாக்
கானயங்கொள்புனல் வாசமார் கலிக்காழியுட்
டேனயங்கொண்முடி யானைந்தாடிய செல்வனே. 5 |
2285.
|
சுழியி
லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவே
மொழியி லங்கும்மட மங்கைபாக முகந்தவன்
கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுட்
பழியிலங்குந்துய ரொன்றிலாப் பரமேட்டியே. 6 |
நடமாடுதல். கல்
அயங்குதிரை சூழ:- கற்களில் அசங்கிய அலை. கல்
வித்தகத்தால் திரை சூழ் கடற்காழி (தி.2 ப.208 பா.11). தொல்புகழ்,
அயங்குபுகழ் - (எங்கும்) பரவிய கீர்த்தி. பேண - அடியவர் விரும்பிப்
புகல. பொருள் சேர் புகழ் புரிந்தார் சுடர் வண்ணன்:-அந்தி வண்ணன்
அழல் வண்ணன் என்பன அவன் திருநாமங்கள்.
5.
பொ-ரை: மாதொருபாகனாய், காடுகளில் படிந்துவரும்
மணம்மிக்க
நீர் சூழ்ந்த காழிப்பதியுள் தேன் மணம் கமழும் திருமுடியில் ஆனைந்தாடிய
செல்வனாகிய சிவபிரான், தூய அழகிய திருமேனியில் திருநீறு பூசியவன்;
நாநயம் பெற வேதங்களை அருளியவன்.
கு-ரை:
தூ - பரிசுத்தம். நயம் - நன்மை. நாநயம்கொள் மறை
-நாவினது நற்பயனைக் கொண்ட வேதம். நாவாலுள்ளதாய நயம். நாநலம் -
நாவாலுளதாய நலம். (குறள். 641 உரை) பூசிப்போய்க் கொள்மறையோதி
என்றியைக்க. ஓதி - பெயர். தேன் கொள்முடி -தேனாட்டப்படும் திருமுடி.
அம் முடியில் ஆனைந்து ஆடிய செல்வன். ஆனைந்து :- பால், தயிர்.
நெய்; பிற சேரா.
6. பொ-ரை:
உப்பங்கழிகளோடு கூடிய கடல் சூழ்ந்திலங்கும்
குளிர்ந்த காழிப்பதியுள் பிறர் பழிக்கும் துன்பம் ஒன்றுமில்லாத
மேன்மையோனாகிய சிவபிரான், சுழிகளைக் கொண்ட கங்கையைச்
சடையில் கொண்டுள்ளதன் மேலும் இனிய மொழியினளாகிய
உமைமங்கையை ஒரு பாகமாக உகந்தவன்.
கு-ரை:
சுழி - நீர்ச்சுழி. கொவ்வைத்துவர் வாயார் குடைந்தாடுந்
திருச்சுழியல் (தி.7 பா.834). மொழி இலங்கும் மடமங்கை
|