2286.
|
முடியி
லங்கும்முயர் சிந்தையான்முனி வர்தொழ
வடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்
கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுட்
கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே. 7 |
2287.
|
வல்ல
ரக்கன்வரை பேர்க்கவந் தவன்றோண்முடி
கல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்
நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவே
தொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே. 8 |
பாகம் உகந்தவன் - மாதியலும்
பாதியன். கங்கையைச் சடையிலும்,
உமைநங்கையை வாமபாகத்திலும் உடையவன். பழி இலங்கும் துயர்
-நிந்தையால் தோன்றும் துயரம். ஒன்று - சிறிதும் என்னும் பொருட்டு.
7. பொ-ரை:
முடியின் மேலிடத்தில் சிந்தையைச் செலுத்தும்
முனிவர்கள் தொழ, நன்றாக வடிக்கப்பெற்று விளங்கும் கழல் காலில்
ஆர்க்க அனலைக் கையில் ஏந்தி ஆடும் இறைவன், மணம் பொருந்திய
பொழில்கள் சூழ்ந்த காழிப்பதியுள் கொடிபோலும் இடை யினளாகிய
பார்வதிதேவியோடு குடி கொண்டுள்ளான்.
கு-ரை:
முடி இலங்கும் உயர் சிந்தையால் முனிவர் தொழ அடி
இலங்கும் கழல் ஆர்க்க - துவாதசாந்தத் தலத்தில் விளங்கும் உயர்ந்த
தியானத்தால் மனனசீலர்கள் வழிபடத் திருவடியில் பிரகாசிக்கும் கழல்கள்
ஒலிக்க, கொண்டது முடி இலங்கும் என்று இயைத்துப் பொருள் கூறலும்
ஆம். கொடி இலங்கும் இடையாள் - மின்னல் கொடி போலத் திகழும்
மெல்லிடையுடைய உமாதேவியார். தொழ ஆர்க்க ஏந்தியும் காழியுட்
குடிகொண்டதோ என்று அறிவினாவாக்குக.
8.
பொ-ரை: கயிலைமலையைப் பெயர்க்க வந்த வலிய
அரக்கனாகிய
இராவணனின் தோள் முடி ஆகியவற்றை அம்மலையாலேயே அடர்த்து
அவனது வலிமையைச் செற்ற சிவபிரான், ஒருமைப்பாடுடைய நற்சிந்தையார்
மலர்தூவிப் போற்றவும் தொன்மையான இருக்கு வேத மொழிகளைப் பாடி
வழிபடவும் மகிழ்ந்து உமையம்மையோடு விளங்குகின்றான்.
கு-ரை:
நல்சிந்தை, ஒருக்கியதோர் சிந்தை - ஒற்றுமையாக்கிய தொரு
மனம். சிவனோடொற்றுமை. அத்துவிதம், மலர்தூவ-
|