பக்கம் எண் :

820

2288.



மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்
இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்
வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவை
கருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.         9
2289.



நன்றியொன்றுமுண ராதவன் சமண்சாக்கியர்
அன்றியங்கவர் சொன்னசொல் லவைகொள்கிலான்
கன்றுமேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்
வென்றி சேர்வியன் கோயில்கொண்ட விடையாளனே. 10


பூக்களைத்தூய் வழிபட. தொல் - தொன்மை, இருக்கும் மறை - விரித்தல்
விகாரமாக்கொண்டு இருக்கு வேதம் எனல் சிறந்தது, இருக்கும் எனில்
அழியாது நிலைபெறும் என்க. மறையேத்து வேதஸ்துதியை. உடன்
-அம்பிகையுடன்.

     9. பொ-ரை: பொருந்திய நான்மறைகளை ஓதுபவனாகிய பிரமன்,
நீலமணி போன்ற நிறத்தினை உடைய திருமால் ஆகிய இருவரும் கூடி
ஏத்த எரிஉருவாய் நின்ற சிவபிரானது ஊர், அஞ்சுமாறு வரும் கடல்
அலைகளையும் அதனால் பெருகும் ஓதநீரையும் பெரியமுத்துக்கள்,
சங்குகள் சேரும் கரிய வைக்கோலைக் கொண்டுள்ள வயல்களையும்
உடைய காழியாகும்.

     கு-ரை: எரியான்தன் ஊர் - தீப்பிழம்பாக நின்றவனதூர், வியல்
முத்தவை - அகன்று பரவிய முத்துக்கள்.

     கருவை - கரிய வைக்கோல். கருவேல மரமுமாம். முத்தவையும்
சங்கும் சேர் காழி என்க.

     10. பொ-ரை: கன்றும் அதன் தாயாகிய எருமையும் இளங்கானலில்
வாழும் காழிப்பதியுள் வெற்றி பொருந்திய பெரிய கோயிலை இடமாகக்
கொண்ட விடையூர்தியானாகிய சிவபிரான் நன்மையைச் சிறிதும் உணராத
வலிய சமணர்களும் சாக்கியர்களும் தம்முள் மாறுபட்டுப் பேசும்
பேச்சுக்களைக் கொள்ளாதவன்.

     கு-ரை: நன்றி - நன்மை. ஒன்றும் - சிறிதும். அன்றி - பகைத்து.
கானல் - கடற்கரைச்சோலை. வென்றி - வெற்றி. வியன்கோயில் - பெரிய
கோயில். விடை ஆளன் - எருதை (ஊர்தியாக) ஆள்பவன்.