2292.
|
துன்னங்கொண்ட
வுடையான் றுதைந்தவெண் ணீற்றினான்
மன்னுங்கொன்றை மதமத்தஞ் சூடினான் மாநகர்
அன்னந்தங்கு பொழில்சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னஞ்செய்தமனத்தார்கள் தம் வினையோடுமே. 2 |
2293.
|
உடுத்ததுவும்
புலித்தோல் பலி திரிந் துண்பதுங்
கடுத்துவந்த கழற்காலன் தன்னையுங் காலினால்
அடுத்ததுவும்பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
றொடுத்தது வுஞ்சர முப்புரந் துகளாகவே. 3 |
2294.
|
காய்ந்ததுவு
மன்றுகாமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவுங் கழற்காலனைப் பண்ணி னான்மறை
ஆய்ந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவு மிமவான் மகளொரு பாகமே. 4 |
2. பொ-ரை:
தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த
திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச்
சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும்
பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம்
உடையவர்களின் வினைகள் நீங்கும்.
கு-ரை:
துன்னம் - தைத்தல். துதைந்த - நெருங்கிய. முற்றப் பூசிய,
முழுநீறுபூசிய மூர்த்தி போற்றி (தி.6 ப.5 பா.3). முழுநீறு பூசிய முனிவர்.
உன்னம் - தியானம். மனத்தார்கள் தம் வினை - மனத்தையுடையவர்
வினைகள்.
3. பொ-ரை:
உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத்
திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால்.
அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம்
தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.
கு-ரை:
உடுத்ததும் தோல், உண்பதும் பலி, காலினால் அடுத்ததும்
காலனை, முப்புரம் துகளாகத் தொடுத்ததும் சரம் என்க. கடுத்து -கோபித்து.
4. பொ-ரை:
அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து
கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது
|