2295.
|
போர்த்ததுவுங்
கரியின் னுரிபுலித் தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு வேந்திக்கோளர வம்மரைக்
கார்த்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே. 5 |
2296.
|
தெரிந்ததுவுங்
கணையொன்று முப்புரஞ் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலருறை வான்றலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாளொர் பாகம் புனைதலே. 6 |
வேதங்களை. ஒரு பாகத்தே
ஏய்ந்து கொண்டது இமவான் மகளை.
அத் தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
கு-ரை:
அன்று நெற்றிக்கண்ணால் காய்ந்ததும் மன்மதனை
பாய்ந்ததும், இயமனை, பண்ணினால் ஆராய்ந்ததும் வேதத்தை,
பொருந்தியதும் இமாசல குமாரி பாகத்தை.
5. பொ-ரை:
போர்த்துள்ளது யானைத்தோல். உடுத்துள்ளது
புலித்தோல்.ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு. அரையில் கட்டியுள்ளது
பாம்பு. பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம். அத்தகையோன்
அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
கு-ரை:
போர்த்ததும் யானைத்தோல். உடை - புலித்தோல். உடை
என்பது தொழிலாகு பெயர். அது (உடுத்தது) வினையாலணையும் பெயர்ப்
பொருளில் எழுவாய் நின்று புலித்தோலென்னும் பெயர்ப் பயனிலை
கொண்டது. மழுவை ஏந்தி அரைக்கு ஆர்த்ததும் அரவம் ( - பாம்பு)
என்க. பார்த்ததும் படர்ந்த எரியில் அரணம் (மும்மதில்) மூழ்க.
6. பொ-ரை:
தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று
உடன்எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய
தாமரைமலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப்
புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த
அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
கு-ரை:
தெரி(ஆராய்)ந்ததும் கணை(-பாணம்). ஒன்றை ஒரு
சேரச்சென்று எரித்ததும் திரிபுரத்தை, முன் அரிந்ததும் அழகு
|