2297.
|
ஓதியெல்லாம்
உலகுக்கொர் ஒண்பொரு ளாகிமெய்ச்
சோதியென்று தொழுவார் அவர்துயர் தீர்த்திடும்
ஆதியெங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியாற் றொழுவார் அவர்வினை நீங்குமே. 7 |
2298.
|
செறுத்ததுவுந்
தக்கன் வேள்வியைத் திருந்தார்புரம்
ஒறுத்ததுவும் மொளிமா மலருறை வான்சிரம்
அறுத்ததுவும்பொழில்சூழ் அகத்தி யான்பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன்றன் தோள்கள் இருபதே. 8 |
பொருந்திய பூவில்
வாழும் பிரமன் தலையை, புரிந்தது (விரும்பிக்
கொண்டது)ம் உமாதேவியார் ஒரு பாகத்தைப் புனைதலை, அப்பனது
ஒரு பாகத்தை அம்மை அழகு செய்ததனாற்றான் உயிர்கட்கு அவ்வழகு
உண்டாயிற்று. அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கையெல்லாம் (சித்தியார்
சூ 1: -69).
7. பொ-ரை:
வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம்
ஒண்பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று
கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன்
விளங்கும் அகத்தியான்பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள்
நீங்கும்.
கு-ரை:
எல்லாம் ஓதி - வேதங்களையெல்லாம் ஓதியருளியவனே!
உலகுக்கு ஓர் ஒண்பொருள் ஆகி - உலகங்களுக்கு ஒப்பற்ற
ஒளிர்பொருளானவனே! மெய்ச்சோதி - உண்மை யொளியே! என்று கூறித்
தொழுபவர் துயர்களைத் தீர்த்திடும் ஆதியாகிய பெருமானது பள்ளியைத்
தொழுவார் வினை நீங்கும் என்க.
8. பொ-ரை:
சினந்து அழித்தது தக்கன் வேள்வியை. ஒறுத்து
எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை. அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த
தாமரைமலர் மேலுறையும் பிரமனின் தலையை. நெரியச் செய்தது
இராவணனின் இருபது தோள்களை. அத்தகையோன் அகத்தியான் பள்ளி
இறைவன் ஆவான்.
கு-ரை:
செறுத்ததும் தக்கன்யாகத்தை. செறுத்தல் - கோபித்தல்,
அழித்தல். ஒறுத்தல் - கடிதல், வருத்துதல். ஒறுத்ததும் பகைவர்
திரிபுரத்தை. திருந்தார் - பகைவர். திருந்தியவர் நண்பராவர். அறுத்ததும்
|