2299.
|
சிரமுநல்ல
மதிமத்த முந்திகழ் கொன்றையும்
அரவுமல்குஞ் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலுந் தேடிய பெற்றிமை
பரவவல்லார் அவர்தங்கள் மேல்வினை பாறுமே. 9 |
2300.
|
செந்துவ
ராடையினாரும் வெற்றரை யேதிரி
புந்தியி லார்களும் பேசும்பேச்சவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள்பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை யானவைசிதைந் தோடுமே. 10 |
ஒளியை உடைய தாமரைப்பூவில்
வாழும் பிரமன் தலையை, இறுத்ததும்
(-முறித்ததும்). இராவணனுடைய இருபது தோள்களையும்.
9. பொ-ரை:
தலைமாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும்,
விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய
அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும்
தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவ வல்லவர் தங்கள்
மேல்வரும் வினைகள் அழியும்.
கு-ரை:
சிரமும் - தலைமாலையும். நல்லமதி (உம்) - அழகிய
பிறையும். மத்தமும் - ஊமத்தம் பூவும். மத்தங்கமழ்சடை (தி.2 ப.205 பா.6).
அரவும் - பாம்பும். அரவம் என்ற பாடம் பிழை என்பது முதலடியாலே
விளங்கும். பெற்றிமை - தன்மை. பாறும் - ஓடும்.
10.
பொ-ரை: சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி
வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும்
பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய
கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி
இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.
கு-ரை:
செந்துவர் ஆடை - செங்காவித்துணி. பேசும் பேச்சவை
-சொல்லும் பரசமயக்கோள்கள்.
அந்தணன்
- சிவன். சிந்திமின் - தியானம் புரியுங்கள், நும்
வினையானவை சிதைந்து ஓடும்.
|