2301.
|
ஞாலம்
மல்குந்தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலுஞ்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூல நல்லபடையான் அடிதொழு தேத்திய
மாலைவல்லா ரவர்தங்கண் மேல்வினை மாயுமே. 11 |
திருச்சிற்றம்பலம்
11.
பொ-ரை: உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய
ஞானசம்பந்தன்
சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான்பள்ளியுள்
விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப்பாடிய
இத்தமிழ்மாலையை ஓத வல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும்.
கு-ரை:
ஆலும் - ஆடும். புடை - பக்கம். நல்ல சூலப்படையான்
என்றும் சூலமாகிய நல்ல படையான் என்றும் கூறலாம். நல்லபாம்பு. மாலை
- இத்திருப்பதிகம். மேல்வினை:- ஆகாமிய கன்மம் என்றலும் பொருந்தும்.
திருஞானசம்பந்தர்
புராணம்
தெண்டிரைசூழ்
கடற்கானல் திருவகத்தி யான்பள்ளி
அண்டர்பிரான் கழல்வணங்கி அருந்தமிழ்மா மறைபாடிக்
கொண்டல்பயில் மணற்கோடு சூழ்கோடிக் குழகர்தமைத்
தொண்டருடன் தொழுதணைந்தார் தோணிபுரத் தோன்றலார்.
-சேக்கிழார்.
|
|