2303.
|
இலையினார்சூல
மேறுகந்
தேறியேயிமை
யோர்தொழ
நிலையினாலொரு காலுறச்
சிலையினான்மதி
லெய்தவன்
அலையினார் புனல்சூடிய
அண்ணலாரறை
யணிநல்லூர்
தலையினாற்றொழு தோங்குவார்
நீங்குவார்தடு
மாற்றமே. 2
|
2304.
|
என்பினார்கனல்
சூலத்தார்
இலங்குமாமதி
யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப்
பிஞ்ஞகன்பிறப்
பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு
முக்கண்மூர்த்திதன்
றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர்
அங்கையாற்றொழு
வார்களே. 3 |
என்று இயைத்துணர்க.
வீடிலாரும் சூடினாரும் பாடினாரும் ஆடினாரும்
ஆகிய சிவபெருமானது ஊர் என்க.
2. பொ-ரை:
இலைவடிவமான முத்தலைச் சூலத்தை ஏந்தி, ஆன்
ஏற்றில் விரும்பி ஏறி வருபவன். இமையவர் வேண்ட நிலைத்த ஒரு
திருவடியால் வில்லை ஊன்றித் திரிபுரங்களை எய்தவன். அலைகளோடு
கூடிய கங்கையை முடிமிசைச் சூடிய தலைவன். அப்பெருமான்
எழுந்தருளிய அறையணிநல்லூர் சென்று அவனைத் தலையினால் தொழும்
பெருமை மிக்கவர் தடுமாற்றம் நீங்குவர்.
கு-ரை:
இலையின்ஆர்சூலம் - மூவிலைவேல் இலையாருஞ்
சூலத்தாய் (அப்பர் திருத்தாண்டகம்) இலைமலிந்த வேல்நம்பி யெறிபத்தர்
(திருத்தொண்டத்தொகை). தடுமாற்றம் - பிறவிக் குழியில் விழுந்தடுமாற்றம்.
ஓங்குவார் தடுமாற்றம் நீங்குவார் என்க. ஆரூர் தம் கையினால் தொழுவார்
தடுமாற்றறுப்பாரே (தி.1 ப.105 பா.6).
3, பொ-ரை:
என்பு மாலை அணிந்தவர். கனலும் சூலத்தை
ஏந்தியவர். விளங்கும் சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர். பின்னே
|