2305.
|
விரவுநீறுபொன்
மார்பினில்
விளங்கப்பூசிய
வேதியன்
உரவுநஞ்சமு தாகவுண்
டுறுதிபேணுவ
தன்றியும்
அரவுநீள்சடைக் கண்ணியார்
அண்ணலாரறை
யணிநல்லூர்
பரவுவார்பழி நீங்கிடப்
பறையுந்தாஞ்செய்த
பாவமே. 4 |
தாழ்ந்து தொங்கும்
சடையினர். தலைக்கோலம் உடையவர். பிறப்பற்றவர்
என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே
வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன்
திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.
கு-ரை:
என்பினார் - எலும்பணிந்தவர். கனல்சூலத்தார் - கனலும்
(தீய்க்கும்) சூலப்படை ஏந்தியவர். மதியுச்சியான் - சந்திரசேகரன். பின்பு
இன் ஆல் - பின்பினால், பின்புறத்தில். பின் - பின்புறத்தில், பின்னால் -
பின்னலால் எனலும் பொருந்தும். பின்றாழ்சடை (தி.1 ப.71 பா.4 ப.80
பா.2)
பின்னுசடைகள் (தி.1 ப.74 பா.6) பன்னியி தாழ்சடையார் (தி.1
ப.8 பா.10).
பிறங்கும்-விளங்கும். பிஞ்ஞகன் என்பது சடையை அடையாக்கொண்டு
நின்றதால் முடியன் என்ற மட்டில் அமைந்தது. முன்பினார் - வலிமை,
பழமையுடையார். நினைத்தலையுடையவர் எனலுமாம். முன் பின் ஆர்
என்று பிரித்துக் காலத்தையும் இடத்தையும் குறித்துக் கூறலுமாம். என்பினார்
சூலத்தார் உச்சியான் பிஞ்ஞகன் பிறப்பிலி என்று கையால் தொழுவாரே
வரும் தொழும் முக்கண் மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.
4. பொ-ரை:
அழகிய மார்பில் திருநீற்றை விரவப்பூசிய வேதியனும்,
வலிய நஞ்சினை அமுதாக உண்டு உலகிற்கு அழியாமை தந்தவனும்,
பாம்பை நீண்ட சடைக்கு முடிக்கண்ணியாகக் கொண்டவனும் ஆகிய
அண்ணல் உறையும் அறையணிநல்லூரைப் பரவுவார் பழி பாவங்கள் நீங்கப்
பெறுவர்.
கு-ரை:
மார்பில் நீறு பூசிய வேதியன் என்றது சிவபிரானை, உரவு
-கடல். அரவு - பாம்பு. கண்ணியார் - தலைமாலையுடையார். பரவுவார்
-வாழ்த்திவணங்குபவர். பழிநீங்கப் பாவம் ஓடும்.
|