2306.
|
தீயினார்திகழ்
மேனியாய்
தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன
லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை
வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய்
பரமனேயடி பணிவனே. 5 |
2307.
|
விரையினார்கொன்றை
சூடியும்
வேகநாகமும் வீக்கிய
அரையினாரறை யணிநல்லூர்
அண்ணலாரழ காயதோர்
நரையினார்விடை யூர்தியார்
நக்கனார்நறும் போதுசேர்
உரையினாலுயர்ந் தார்களு
முரையினாலுயர்ந் தார்களே. 6 |
5. பொ-ரை:
தீப்போல விளங்கும் செம்மேனியனே!
தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவனே! கொன்றை
மலர் அணிந்தவனே! அனலைக்கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை
அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக்
காய்ந்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப்
பணிகின்றேன்.
கு-ரை:
தீயின் ஆர் திகழ் மேனியாய் - தீயைப்போலப் பொருந்திய
பிரகாசிக்குந் திருமேனியை உடையாய். தேவர் தாம் தொழு தேவன் நீ
ஆயினாய், கொன்றையினாய், அனல் அங்கையாய், வீட்டினாய், பாயினாய்
கழலினாய், பரமனே என மனமுருக வாய்குளிர அழைத்து, அடிபணிவன்
என்றது பக்திசாகரத்தில் அழுத்துகின்றது. தம - தம்முடைய. பாயினாய் -
பாய்ந்தாய்.
6. பொ-ரை:
மணம் கமழும் கொன்றை மாலையைச் சூடியவர்.
சினம் மிக்க பாம்பினை அரையில் கட்டியவர். அறையணிநல்லூரில்
விளங்கும் தலைமையாளர். அழகிய வெண்ணிறமான விடையை
|