பக்கம் எண் :

832

2308.







வீரமாகிய வேதியர்
     வேகமாகளி யானையின்
ஈரமாகிய வுரிவைபோர்த்
     தரிவைமேற்சென்ற வெம்மிறை
ஆரமாகிய பாம்பினார்
     அண்ணலாரறை யணிநல்லூர்
வாரமாய்நினைப் பார்கள்தம்
     வல்வினையவை மாயுமே.     7


ஊர்தியாக உடையவர். திகம்பரர். அப்பெருமானை மலர்தூவி உரையினால்
போற்றுபவர் புகழாளர் ஆவர்.

     கு-ரை: வேகம் - விடவேகம். பத்துவேகம் ‘பத்துக்கொலாம் அவர்
பாம்பின்கண் பாம்பின்பல்’ (தி.4 ப.18 பா.10). நாகம் - பாம்பு. வீக்கிய -
கட்டிய. அரையில் நாகம் வீக்கினார் என்க. நரையின் ஆர் விடை
-வெண்ணிறத்தினைப் பொருந்திய எருது. நறும்போது - நறுமணம் கமழும்
பூக்கள். உரையினால் - 1. தோத்திரங்களால், 2, புகழால், பூவால் அருச்சித்து
வாயால் தோத்திரம் புரிதல்பற்றிப், ‘போதுசேர் உரை’ என்றார். ‘உரை
மாலையெல்லாம் உடைய அடி’ (தி.6 ப.6 பா.7) ‘உரையாலுணரப்படாத அடி’
‘உரையாரும் புகழானே’ (தி.6 ப.62 பா.6) ‘உரைப்பார் உரை உகந்து
உள்கவல்லார்தங்கள் உச்சியாய்’ (தி.7 பா.936) ‘உரையார் தமிழ்மாலை’ (தி.1
ப.84 பா.11) ‘உரைப்பார் உரைப்பவையெல்லாம் இரப்பார்க் கொன்றீவார்
மேல்நிற்கும் புகழ்’ (குறள்). அர்ச்சனையில் உயர்வது புகழில் உயர்வதாகும்
என்றவாறு. வழிபாட்டால் வரும் புகழேயன்றி மற்றைய வழிகளால் வரும்
புகழ் உயர்வுடையதன்று. ‘உரையார் பொருளுக்குலப்பிலான்’ (தி.6 ப.11 பா.7)
என்பதற்கேற்பப் பொருள் உரைத்தலுமாம்.

     7. பொ-ரை: ஞானமே வடிவான வேதியர். சினந்து வந்த பெரிய
களிற்று யானையின் ஈரம் உடைய தோலைப் போர்த்து உமையம்மையார்
பாற் சென்றவர். பாம்பினை ஆரமாகக் கொண்டவர். அறையணி நல்லூரில்
விளங்கும் தலைமையாளர். அவரை அன்போடு நினைப்பவர்களின் வலிய
வினைகள் மாயும்.

     கு-ரை: வீரம் - ஞானம். ஞானவேதியர் - சிவபிரான். அட்டவீரட்டம்
(எட்டு வீரத்தலம்) நோக்கின் சிவபிரானுக்குப் பொருந்தும். (வீரம் ஆகிய
வேதியர்) தக்கயாகத்திலிருந்தவர்களும் ஆம். வேக