2309.
|
தக்கனார்பெரு
வேள்வியைத்
தகர்த்துகந்தவன்
றாழ்சடை
முக்கணான்மறை பாடிய
முறைமையான்முனி
வர்தொழ
அக்கினோடெழி லாமைபூண்
அண்ணலாரறை
யணிநல்லூர்
நக்கனாரவர் சார்வலால்
நல்குசார்விலோம்
நாங்களே. 8 |
2310.
|
வெய்யநோயிலர்
தீதிலர்
வெறியராய்ப்பிறர்
பின்செலார்
செய்வதேயலங் காரமா
மிவையிவைதேறி
யின்புறில் |
மாகளியானை - அவர்கள்
வேகத்துடன் போதர ஏவிய பெரிய
மதக்களிப்பையுடைய யானை. யானையின் ஈரம் ஆகிய உரிவை - அந்த
யானை ஈரிய தோல். அரிவை - உமாதேவியார். பாம்புமாலையணிந்தவர்.
வாரம் - அன்பு. நினைப்பார்கள் தம் வல்வினை மாயும் - தியானம்
புரிபவர்களுடைய தீவினை அழியும்.
8. பொ-ரை:
தக்கனது பெருவேள்வியைத் தகர்த்துகந்தவர்.
தாழ்ந்து தொங்கும் சடைகளையும் மூன்று கண்களையும் உடையவர்.
முனிவர்கள் தொழ வேதங்களை முறையோடு அருளியவர். என்பு
மாலைகளையும் அழகிய ஆமை ஓட்டினையும் அணிந்த தலைமையாளர்.
அறையணிநல்லூரில் விளங்கும் திகம்பரர். நாங்கள் அவரது சார்பன்றி
நலம் செய்யும் வேறு சார்பிலோம்.
கு-ரை:
தக்கனார் - தக்ஷன். முக்கணான் - திரிநேந்திரன். அக்கு
-எலும்பு. உருத்திராக்கமுமாம். ஆமைபூண்ட அண்ணலார். அவர்சார்வு
-அச்சிவபிரான்றிருவடிச்சார்பு. நாங்கள் அவர் சார்வு அல்லால் பேரின்பம்
பயக்கும் சார்பு வேறிலோம். அடுத்த பாடலின் ஈற்றடியும் ஈதேயாதல்
அறிக. (தி.2 ப.44 பா.3).
9.
பொ-ரை: வெம்மையான நோய்கள் எவையும் இல்லாதவர்.
வெறிபிடித்தவர் போலப் பிறர் பின் செல்லாதவர். அவர் செய்வதே
அலங்காரம் ஆகும். இவற்றை முறையே தெளிந்து இன்புறவேண்டின்
|