|
ஐயமேற்றுணுந்
தொழிலரா
மண்ணலாரறை
யணிநல்லூர்ச்
சைவனாரவர் சார்வலால்
யாதுஞ்சார்விலோம்
நாங்களே. 9 |
2311.
|
வாக்கியஞ்சொல்லி
யாரொடும்
வகையலாவகை
செய்யன்மின்
சாக்கியஞ்சம ணென்றிவை
சாரேலும்மர
ணம்பொடி
ஆக்கியம்மழு வாட்படை
யண்ணலாரறை
யணிநல்லூர்ப்
பாக்கியங்குறை யுடையீரேற்
பறையுமாஞ்செய்த
பாவமே. 10 |
ஐயமேற்றுண்ணும் தொழிலரும்
தலைமையாளரும் ஆகிய அறையணி
நல்லூர்ச் சைவராகிய சிவபெருமானே நமக்குச் சார்வு ஆவார்: வேறு
எதனையும் நாம் சாரோம் என்று எண்ணுக.
கு-ரை:
வெய்ய - வெம்மையுடைய. வெறியராய் - வெறி
பிடித்தவர்போல, செய்வதே அலங்காரம் ஆம் இவை இவை என்பது
செய்வனவே அழகாக்கும் பெற்றிபோலும். அவர் கொண்டதே கோலம்
என்றலும் அமையும். எருக்கு முதலிய அணிதல், பாம்பணிதல் முதலியவை
நோக்கின், சிவபிரானுக்கு அன்றிப் பிறர்க்கு அவை அலங்காரமாதல்
இன்மை விளங்கும். சைவன்-சிவபிரான். சைவா போற்றி (திருவாசகம்.)
மான்மறிமழுவொன்றேந்துஞ் சைவன் (தி. 4ப.62 பா. 4).
சைவத்தசெவ்வுருவன் திருநீற்றன் (தி.7 பா. 838)
10.
பொ-ரை: நீண்ட தொடர்களைப் பேசி யாரோடும்
வகையல்லாதவற்றைச் செய்யாதீர். சாக்கியர் சமணர் நெறிகளைச் சாராதீர்.
திரிபுரங்களைப் பொடியாகச் செய்த மழுவாட்படை அண்ணலார் உறைகின்ற
அறையணிநல்லூரை அடைந்து பாக்கியமாகிய தேவையை நிறைவு
செய்துகொள்ள விரும்புவீராயின் அதனை அடைதலே அன்றிப் பாவங்களும்
கழியப்பெறுவீர்.
கு-ரை:
வாக்கியம் - பொருள் முற்றுப்பெற்ற சொற்றொடர். சாரேலும்
- சாராதீர்கள். சாராதேயுங்கள். சாரேல்:- ஒருமை,
|