பக்கம் எண் :

835

2312.







கழியுலாங்கடற் கானல்சூழ்
     கழுமலம்அமர் தொல்பதிப்
பழியிலாமறை ஞானசம்
     பந்தனல்லதோர் பண்பினார்
மொழியினாலறை யணிநல்லூர்
     முக்கண்மூர்த்திதன் றாள்தொழக்
கெழுவினாரவர் தம்மொடுங்
     கேடில்வாழ்பதி பெறுவரே.      11

திருச்சிற்றம்பலம்


அதனொடு ‘உம்’ சேர்த்து முன்னிலைப் பன்மை யேவலாக்கினர். இது
திருமுறையில் பல இடத்தில் காணப்படும். (தி.2 ப.119 பா.10; தி.3 ப.91
பா.10) காண்க. அரணம் - திரிபுரம். ஆக்கிய மழு. மகர மெய் விரித்தல்
விகாரம். பாக்கியம் குறை - பாக்கியமாகிய இன்றியமையாப் பொருள்.
பாக்கியம் - தெய்வம். (குறள் - 1141) எதுவந்தால் முடிவுறும்? அஃது,
இல்லாமல் குறையாகி அவாவப்படும். படவே குறை என்பதற்கு
முடிக்கப்படும் பொருள், இன்றியமையாப் பொருள் என்று பொருளு
ரைத்தனர் சான் றோர். (குறள்.612)

     11. பொ-ரை: உப்பங்கழிகள் உலாவும் கடற்சோலைகள் சூழ்ந்த
தொல்பதியாகிய கழுமலத்தில் தோன்றிய குற்றமற்ற மறை வல்ல
ஞானசம்பந்தன் அருளிய பதிகத்தை ஓதும் நற்பண்பினராய் அறையணி
நல்லூரை அடைந்து முக்கண் மூர்த்தியாகிய சிவபிரான் திருவடிகளைத்
தொழுது போற்றப் பொருந்தியவர்கள் குற்றமற்றவர் வாழும் சிவலோகத்தை
அடைவர்.

     கு-ரை: பழி இல்லாமை மறைக்கு அடை. பண்பின் ஆர்
மொழியினால் - இத்திருப்பதிகத்தால். கெழுவினார் - பொருந்தினவர்.
கேடு இல்வாழ்பதி - சிவலோகம். தம்மொடும் பதி பெறுவர் என்றதால்,
தம்மையும் பெறுவர், பதியையும் பெறுவர் என்க. தம்மைப் பெறுதல்
-‘தம்மையுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்’. (சிவஞான. அவையடக்கம்)
என்றவாறு தம்மையுணர்தல். ‘தன்னுயிர்தானறப் பெற் றானை ஏனைய
மன்னுயிரெல்லாந்தொழும்’ (குறள்.268). பதி - சிவம்.