பக்கம் எண் :

837

2314.







அக்கரவ்வணி கலனென
     அதனொடார்த்ததொ ராமைபூண்
டுக்கவர்சுடு நீறணிந்
     தொளிமல்குபுனற் காவிரிப்
புக்கவர்துயர் கெடுகெனப்
     பூசுவெண்பொடி மேவிய
மிக்கவர்வழி பாடுசெய்
     விளநகரவர் மேயதே.             2


     2. பொ-ரை: எலும்பையும் பாம்பையும் அணிந்து, அவ்வணிகலனோடு
ஆமை ஓட்டையும் பூண்டு இறந்தவரை எரித்த சுடுகாட்டு நீற்றை அணிந்து
விளங்கும் பெருமான் மேவிய தலம் ஒளி நிறைந்த நீரை உடைய காவிரியில்
மூழ்கிய அடியவர் துயர் கெடுமாறு நீறு பூசியவராய் வழிபாடு செய்கின்ற
விளநகராகும்.

     கு-ரை: அக்கு அரவு அணிகலன் என அதனொடு ஆர்த்தது. ஓர்
ஆமைபூண்டு - எலும்பும் பாம்பும் (அழகுற) அணியும் ஆபரணம் என்ன,
அவ்வாபரணத்தோடு கட்டியதோராமை அணிந்து, அணிகலனைச் சுட்டாமல்
அக்கரவு:- தட்டிற்றெனில் அவற்றொடு எனல் வேண்டும். அக்கர் எனின்,
வலிந்து பொருள் கொள்ளலாம். உக்கவர் - அழிந்தவர். சுடுநீறு:-
முற்பதிகத்தின் முதற்பாட்டுரையிற் பார்க்க. (பதி.211 பா.3) ‘ஒளிமல்கு புனல்
காவிரி’ என்றது இன்றும் கண்கூடு. பூண்டு அணிந்து அவர் மேயது விளநகர்
என்க. காவிரிப்புக்கவர் என்பது சிவ பிரானைக் குறித்ததாக்க்கொள்ளின்,
அணிந்த புக்கவர் என்க. காவிரிப் புக்கவர் -காவிரி நீரிற் புகுந்து
முழுகியவர், இது சிவபிரான் தீர்த்தம் அருளற்பொருட்டு எழுந்தருளும்
உண்மை குறித்தது. ‘துயர்கெடுக’ எனச்சங்கற்பஞ்செய்து திருநீறு பூசுதல்
வேண்டும். துயர் - பிறவித் துன்பம். துயர்க்கேடு - பாசநீக்கம். ‘துயர்
கெடுக’ என்றார்க்கு இன்புறுக என்றலும் உட்கோளாகும். அவ்வின்பாக்கம் -
சிவப்பேறு. இவ் விரண்டும் சேர்ந்ததே ஆன்மலாபமாகிய முத்தி. “பாசவீடும்
சிவப் பேறும் எனப் பயன் இருவகைப்படும். அவ்விரண்டனுள் பாசவீடாகிய
பயனைப்பெறுமாறு உணர்த்து. . . . . தல் பயனோத்தின் முதற்பாதமாகிய
இப்பத்தாஞ் சூத்திரத்தின் கருத்து என்க” (சிவஞானபோதம், சூ. 10.
மாபாடியம்) “ஆன்மலாபம் இரண்டனுள் முடிவாய் எஞ்சிநின்ற சிவப்பேறு
கூடுமாறுணர்த். . . துதல் பயனோத்தின் இரண்டாம் பாதமாகிய
பதினோராஞ்சூத்திரத்தின் கருத்து என்க” “ஆன்மலாபம் எனப்படும்