2315.
|
வாளிசேரடங்
கார்மதி
தொலையநூறிய
வம்பின்வேய்த்
தோளிபாகம் அமர்ந்தவர்
உயர்ந்ததொல்கட
னஞ்சுடன்
காளமல்கிய கண்டத்தர்
கதிர்விரிசுடர்
முடியினர்
மீளியேறுகந் தேறினார்
மேயதுவிள
நகரதே. 3 |
பயன் இரண்டனுள் பாசநீக்கம்
உணர்த்திய பின்னர்ச் சிவப்பேறு
உணர்த்துதல் முறைமை (ஷ. சூ.11) இவ்விரண்டும் சிவாயநம என்று
நீறணிந்தேன் என்று, திருவருளால் வந்த தேவாரத்தில் உள்ளன.
துயர்கெடு கெனப்பூசுவெண்பொடி என்றதால், பூசும்பொழுது
திருவைந்தெழுத்தோதாது பூசுவது தகாது. மிக்கவர்-மேலான அடியவர்.
வழிபாடு-அருள் வழிபடுஞ் சிவதரிசனம் முதலியவை. நிலைநிலையாப்
பொருளுணர்ந்து பற்றிகந்து கரணம் ஒரு நெறியே செல்லப் புலனெறி
நீத்து அருள் வழிபோ தல் வழிபாடு. (திரு விளையாடற் புராணம்).
3.
பொ-ரை: அம்பினைச் சேர்ப்பித்துப் பகைவரின்
முப்புரங்களை
அழியுமாறு செய்தவரும், புதிய மூங்கில் போலும் தோள்களை உடைய
உமையம்மையை ஒரு பாகமாக விரும்பி ஏற்றவரும், உயர்ந்த பழமையான
கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்டதோடு அதன் கரிய நிறம் மல்கிய
கண்டத்தை உடையவரும், ஒளிவிரிந்த தழல்போலும் சடையினரும், வலிய
விடையேற்றை உகந்து ஏறி வருபவரும் ஆன சிவபிரான் மேவியது விளநகர்.
கு-ரை:
வாளி - அம்பு. அடங்கார் - பகைவர். மதில் - மும்மதில்.
நூறிய - அழித்த. வம்பின் வேய்த்தோளி - புதிய மூங்கிலை ஒத்த
தோள்களையுடைய உமாதேவியார், இரண்டு கணுக்கட்கும் இடைப்
பகுதியே தோளுக்கு ஒப்பு. வம்பு - புதுமை. உயர்ந்த கடல், தொல் கடல் -
பாற்கடல். நஞ்சு - விஷம். காளம் - கருமை. மல்கிய - நிறைந்த.
காளமல்கிய கண்டத்தர்:- திருநீலகண்டர். கதிர் - செவ்வொளி. விரி -
விரியும். சுடர்முடியினர் - நெருப்பைப்போலும் சடைமுடியுடையவர்.
அலரும் எரிசெஞ்சடை (பதி. 37) எரிதருசடை (பதி. 122) எரியார்
சடை
(பதி.154) அனல்நிகர்சடை (பதி.123) கனல் செய்தகமழ் சடை
(பதி.121)
தீச்செய்தசடை (பதி.119) நெருப்பினாற்
|