|
சென்னிதிங்களைப்
பொங்கராக்
கங்கையோடுடன்
சேர்த்தினார்
மின்னுபொன்புரி நூலினார்
மேயதுவிள
நகரதே. 5 |
2318.
|
தேவரும்மம
ரர்களுந்
திசைகண்மேலுள
தெய்வமும்
யாவரும்மறி யாததோ
ரமைதியாற்றழ
லுருவினார்
மூவரும்மவ ரென்னவும்
முதல்வரும்மிவ
ரென்னவும்
மேவரும்பொரு ளாயினார்
மேயதுவிள
நகரதே. 6 |
பாடுபவர். முடியில்
திங்கள், சினம்மிக்க பாம்பு, கங்கை ஆகியவற்றைச்
சூடியவர். மின்னுகின்ற பொன்போலும் முப்புரிநூலை அணிந்தவர்.
அவ்விறைவர் அன்பர்கள் வணங்கித் தூநெறி பெறும் பொருட்டு
எழுந்தருளியிருக்குமிடம் பரவிய புகழையுடைய காவிரியின் துறைகளை
உடைய கரையில் அமைந்த விளநகராகும்.
கு-ரை:
பன்னினார் - சொன்னார், ஆராய்ந்தார். மறை இடைநிலை
விளக்கு. பாய - பரவிய. சீர்க்காவிரி, பழங்காவிரி, காவிரித் துறை.
முன்னினார்-அணுகினவர். தூநெறி - தூய (சிவ)கதி. (பா. 11) திங்களை
அராவோடும் கங்கையோடும் உடன் சேர்த்தவர், ஓடு உடன் இரண்டும்
ஒருசேர நின்றதறிக.
6. பொ-ரை:
தேவரும், அமரரும், திசைக்காவல் தெய்வங்களும்
முதலான யாவராலும் அறிதற்கரிய இயல்பினர். தழல் போலும் உருவினர்.
திருமால், பிரமன், உருத்திரன் ஆகிய மூவரும் இவரே என்று கூறுமாறும்
அவர்களின் தலைவராய் விளங்குவார் இவரே என்னுமாறும் பொருந்த
அரிய பொருளாய் விளங்குபவர். அவ்விறைவர் மேவிய இடம் விளநகராகும்.
கு-ரை:
தேவர் அமரர் என்பர் வெவ்வேறு எனல் காண்க. தேவர்
-தெய்வமாவார். அமரர் - மரணமில்லாதவர். அமரார்
|