பக்கம் எண் :

841

2319.



சொற்றருமறை பாடினார்
     சுடர்விடுஞ்சடை முடியினார்
கற்றருவடங் கையினார்
     காவிரித்துறை காட்டினார்
மற்றருதிர டோளினார்
     மாசில்வெண்பொடிப் பூசினார்
விற்றருமணி மிடறினார்
     மேயதுவிள நகரதே.           7


என்றிருந்து, கால் குறைந்ததுபோலும், மரணமில்லாமையுடையவராய்த்
தெய்வ மாகாதவர் அமரர். தெய்வமாகி மரணம் உடையார் தேவர்.
‘நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்’ (தி.5 ப.100 பா.3) என நுதலுந்
தேவாரத்தால் தேவர்க்கு மரணம் உண்மை வெள்ளிடைமலை. ‘செத்துச்
செத்துப் பிறப்பதே வென்று பத்திசெய் மனப்பாறை கட்கு ஏறுமோ’
(தி.5 ப.100 பா.2). திசைகள் மேல்உள தெய்வமும் - அஷ்டதிக்
பாலகர்களும், யாவரும் அறியாதது ஓர் அமைதி:- “ஏனையாவரும்
எய்திடல் உற்று மற்று இன்னது என்று அறியாத தேனை......
சிவனை.......க்குறுகிலேன்” (திருவாசகம், திருச்சதகம். 42) மூவரும்
இவரே எனவும் முதல்வரும் இவரே எனவும் மேவ அரும்பொருள்
ஆயினார். இத்திருப்பாடலில் சிவபரத்துவம் உணர்த்தப்பட்டதறிக. மேவ -
அடைய.

     7. பொ-ரை: எழுதி உணர்த்தாது சொல்லப்பட்டே வரும்
வேதங்களை அருளியவர். ஒளிவிடும் சடைமுடியை உடையவர். செபமணி
மாலையைக் கையில் கொண்டவர். மற்போர் செய்தற்கு ஏற்ற திரண்ட
தோள்களை உடையவர். குற்றமற்ற வெண்மையான திருநீற்றுப்பொடி
பூசியவர். ஒளி தரும் நீலமணி போலும் மிடறுடையவர். அவ்விறைவர்
மேவியது காவிரித்துறையில் அமைந்த விளநகராகும்.

     கு-ரை: சொல்தரும் மறை - ‘எழுதாக்கிளவி’ யாதலின் கண்
வழியே காணும் எழுத்தாலன்றிச் செவிவழியே கேட்டு உணரச் சொல்லால்
தரும் உயர்வுடைய வேதம். ‘சொற்றருமறை முதல் தொன்மை நூல்முறை
கற்றொளிர் சிவப்பிரகாச நூல்புகல் கொற்றவன் குடிவருகுரவன்’
(சிவபுண்ணியத்திரட்டு).

     கல்தருவடம் - செபமணி மாலை. தருவ்வடம் - வகரம் விரித்தல்
விகாரம். மல் - வலிமை. திரள்தோளினார், பொடிப்