2320.
|
படர்தருஞ்சடை
முடியினார்
பைங்கழலடி
பரவுவார்
அடர்தரும்பிணி கெடுகென
அருளுவார்அர
வரையினார்
விடர்தரும்மணி மிடறினார்
மின்னுபொன்புரி
நூலினார்
மிடறரும்படை மழுவினார்
மேயதுவிள
நகரதே. 8 |
2321.
|
கையிலங்கிய
வேலினார்
தோலினார்கரி
காலினார்
பையிலங்கர வல்குலாள்
பாகமாகிய
பரமனார்
மையிலங்கொளி மல்கிய
மாசிலாமணி
மிடறினார்
மெய்யிலங்குவெண் ணீற்றினார்
மேயதுவிள
நகரதே. 9 |
பூசினார்-திருநீற்றையணிந்தவர்.
ஒற்றுமிகை. வில்-ஒளி. தரும்மணி-நீலரத்நம்.
முதலடியில் தருதல் துணைவினை யாதலும் கூடும்.
8.
பொ-ரை: பரவிய
சடைமுடியை உடையவர். தம் கழல்
அடிகளைப்பரவும் அடியவர்களை வருத்தும் பிணிகள் கெடுவனவாக என
அருள் செய்பவர். பாம்பினை இடையில் கட்டியவர். மலைப் பிளவில்
இருந்து கிட்டும் நீலமணி போலும் மிடற்றை உடையவர். மின்னுகின்ற
பொன் போன்ற முப்புரி நூலை அணிந்தவர். வலிய படைக்கலனாக
மழுவை ஏந்தியவர். அவ்விறைவர் மேவியது விளநகராகும்.
கு-ரை:
படர்தரும்-படரும்பைங்கழல் அடி-பசிய கழலை அணிந்த
திருப்பாதம். ஒற்று விரித்தல் விகாரமஅடர்தரும்-தாக்கும். பிணிகெடுக
என அருளுவார். துயர் கெடுக என (பா.- 2). இவ்வீரிடத்தும்
வியங்கோள்வினையின் ஈற்றுயிர் கெட்டது. அரவு அரையினார்-பாம்பைக்
கச்சாகக்கட்டிய திருவரையுடையவர். விடர்-மலைப்பிளப்பு. மலைகளில்
மணி கிடைத்தல்பற்றிக் கூறியது. மின்னு பொன்புரி நூலினார் (பா.5).
|