பக்கம் எண் :

844

2323.







மென்சிறைவண் டியாழ்முரல்
     விளநகர்த்துறை மேவிய
நன்பிறைநுத லண்ணலைச்
     சண்பைஞானசம் பந்தன்சீர்
இன்புறுதமி ழாற்சொன்ன
     ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்
துன்புறுதுய ரம்மிலர்
     தூநெறிபெறு வார்களே.           11

                  திருச்சிற்றம்பலம்


     கு-ரை: கீழஉள்ள்தைக் காண்பன் என்ற மாமணிவண்ணன்-திருமால்.
மேல்உள்ளதைக் காண்பன் என்ற மாமலர் அண்ணல்-பிரமன்,இவ்வாறு
கொள்ளாமல், எங்கும் உள்ள தன்னைக் கீழ் காண்பன் மேல் காண்பன்
என்றதாக்கொள்ளுதல் சிறப்புடையது. வண்ணனும் அண்ணலும் கண்டிலார்
என்க. உள்ளது+அன்+தன்+ஐ=உள்ளதன்றனை எனக்கொண்டு, சிவபிரானை
என்று பொருளுரைத்தல் மிக்க பொருத்தமுடையதாம். ‘ஓர்த்து உள்ளம்
உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு’ என
நீதி நூலும், உள்ளது என்னும் வினைப் பெயரால் சச்சிதாநந்தப் பொருளை
உணர்த்துகின்றது. ‘உன்னும் உளது ஐயம் இலது’ எனச் சிவாகமமும்
(திருவருட்பயன். 10) உணர்த்திற்று. உள்ளது-சத்து. சத்தெனவே
அவிநாபாவமாகிய சிதாநந்தமும் பெறப்படும். சர்வ வியாபகவஸ்துவே
உள்ளது எனப்பட்டது.

     11. பொ-ரை: மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ்
போல முரலும் விளநகரில் காவிரித்துறையில் எழுந்தருளிய பிறைசூடிய
பெருமானை, சண்பைப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் சிறப்பும்
இனிமையும் பொருந்திய தமிழால் புனைந்த இப்பாடல்களைக் கூறி
ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைதல் இலர்.
தூய வீட்டு நெறியைப் பெறுவார்கள்.

     கு-ரை: வண்டுகள் யாழோசையைச் செய்கின்ற துறை என்று
வளங்கூறப்பட்டது. சண்சைீகாழித் தலப் பெயர்களுள் ஒன்று. சீர் இன்பு-
சீரும் இன்பமும். துன்பு உறும் துயரம்-துன்பமும் அடையும் துயரமும்.
அண்ணலைச் சொன்னவற்றை ஏத்துவார் தூநெறி பெறுவார்கள்.