பதிக
வரலாறு:
திருவாரூரிற்
புற்றிடங்கொண்டருளும் பொற்றியாகராசரைத்
திருநீற்றடைவே மெய்ப்பொருளின்ப வாழ்வு என்று அறிந்து, அநுபவித்து
விளங்கும் திருத்தொண்டர்களுடன் இருந்தருளி, வழிபட்டுவருந்
திருஞானசம்பந்த சுவாமிகள், திருப் புகலூரில் எழுந்தருளியிருக்கும்
திருநாவுக்கரசு சுவாமிகளைக் காண விரும்பினார்கள். ஆரூர்ப்புறத்தே
போந்தார்கள். போந்ததும் ஆரூரையே நோக்கி நின்றார்கள்திருப்புகலூர்
வருக என்று அழைக்கின்றது. திருவாரூர் செல்லவொட்டாது தடுக்கின்றது.
பிள்ளையார் உள்ளம், இடையில் ஒன்றும் துணியாது நிற்கின்றது.
அந்நிலையை நோக்கி, அவ்வுள்ளத்தை அறிவுறுத்தும்போது, அவம் இல்லாத
நெஞ்சமே! நீ அஞ்சாதே. உய்யும்வகையை உணர்வாய்நீ, செம்பொற் புற்றின்
மாணிக்கச் செழுஞ்சோதியை நேர்தொழுஞ் சீலத்தை மறவாதே.
தொழுதெழுந்து வழிபடு என்றருளியவராய்ப் பாடியது இத்திருப்பதிகம்.
பண்:
காந்தாரம்
ப. தொ. எண்:
215 பதிக எண்: 79
திருச்சிற்றம்பலம்
2324.
|
பவனமாய்ச்
சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச்
சட்ட வுண்டு
சிவனதாட் சிந்தியாப் பேதைமார் போலநீ
வெள்கி னாயே
கவனமாய்ப் பாய்வதோ ரேறுகந் தேறிய
காள கண்டன்
அவனதா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
டஞ்ச னெஞ்சே. 1 |
1. பொ-ரை:
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி
நிலை எய்தி, நா எழாதுலர்ந்து பிறர் பஞ்சில் தே்ய்த்துப்பால் முதலியவற்றைப்
பிழிய உண்டு மரணமுறுங்காலத்தில் சிவபெருமானின்
|