2331.
|
என்பினாற்
கழிநிரைத் திறைச்சிமண் சுவரெறிந்
திதுநம்
மில்லம்
புன்புலா னாறுதோல் போர்த்துப்பொல் லாமையான்
முகடு
கொண்டு
முன்பெலா மொன்பது வாய்தலார் குரம்பையின்
மூழ்கி
டாதே
அன்பனா ரூர்தொழ துய்யலா மையல்கொண்
டஞ்ச
னெஞ்சே. 8
|
அந்தளகம்-கவசம்.
(தமிழ் லெக்ஸிகன். பக்கம்.82) ஈச்சோப்பி-ஈயோட்டி.
விருது என்றாருமுளர். வட்டின்மாறி வாழ் உடம்பு-உடையை மாற்றுவதுபோல்
உடம்பினை மாற்றுவது அவ்வுடம்பினை எடுக்கச் செய்யும் வினைப்பயனாக
உயிர்க்கு நிகழ்வதுவட்டு-உடை. வட்டின்-வட்டுப்போல. உடம்பில் மாறி
வாழ்தல் ஆவது எடுத்த உடம்பினை விடுத்துப் புதியதோருடம்பிற்புகுதல்.
யானை, சிவிகை, அந்தளகம், ஈச்சோப்பி என்பவற்றை உடையவர்
அருள்வாழ்வு பெறாராயின், அழியாத பேற்றை அடைவாரல்லார். மாறிவாழ்
உடம்பினாரேயாவர். அவர் அந்நடலையே படுவர். நடலை-பொய். அதை
நன்று என்று மயங்கிப் பற்றின் பிறவிதொலையாது. அல்லியங்கோதையார்
பாகராகிய தியாகராயரைத் தொழுது பிறவித் துன்பத்தினின்றும் உய்தி
அடையலாம். நெஞ்சே மையல் கொண்டு அஞ்சாதே என்க.
செல்வராயிருந்தபோது யானை மீதும் சிவிகை மீதும் சென்றவர்,
வறியரானபோது, ஈயோட்டும் இழி நிலையும் உண்ணும் வட்டில் மாறும்
நிலையும் அடைவது பற்றிக் கூறியதாகக் கொள்ளலும் பொருந்தும்.
8. பொ-ரை:
நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி
இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும்
தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடுவேய்ந்தமைத்தது நம்
இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம்
உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கிவிடாமல் நம்மேல்
அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம்.
மையல் கொண்டு அஞ்சாதே!
கு-ரை:
எறிந்து-நீளக்கட்டி. முகடு-மேல்மூடு. ஒன்பது வாய்தல் -
நவத்துவாரம். குரம்பை-உடற்குடில். (தி.4 ப.33 பா.4). அன்பன் -சிவபிரான்.
அன்பே சிவம். கால்கொடுத்தெலும்பு......கூரை (தி.4 ப.67 பா.13) ஊன்
உடுத்தி ஒன்பது வாசல் வைத்து
|