பக்கம் எண் :

856

2332.







தந்தைதாய் தன்னுடன் றோன்றினார் புத்திரர்
     தார மென்னும்
பந்தநீங் காதவர்க் குய்ந்துபோக் கில்லெனப்
     பற்றி னாயே
வெந்தநீ றாடியா ராதியார் சோதியார்
     வேத கீதர்
எந்தையா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே.             
       9
2333.



நெடியமால் பிரமனு நீண்டுமண் ணிடந்தின்ன
     நேடிக் காணாப்
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர்
     மலையாள் பாக


ஒள்ளெலும்பு தூணா உரோமம் மேய்ந்து தாம் எடுத்த கூரை’ தி.6 ப.12 பா.1)
முகடு என்பது மூடு என மரூஉவாகும். ஒன்பது வாய்தல;-‘புழுப் பெய்த
பண்டிதன்னைப் புறம் ஒரு தோலான் மூடி ஒழுக்கு அறா ஒன்பது வாய்
ஒற்றுமை ஒன்றும் இல்லை’ (தி.4 ப.5 பா.22) குரம்பை-(தி.4 ப.31 பா.2, 3,).
‘புலால் கமழ்பண்டம்’ (தி.4 ப.67 பா.8)

     9. பொ-ரை: நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர்,
மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடுபடாதவர்க்கு உய்தி அடையும்
உபாயம் இல்லை எனத் தெளிந்து, வெந்த வெண்பொடி பூசியவரும்,
ஆதியான வரும் சோதியரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும்
ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு
அஞ்சாதே!

     கு-ரை: நெஞ்சே, நீ, அஞ்சாதே, தந்தை, தாய், சகோதரர், புத்திரர்,
மனைவி என்னும் பற்று நீங்காதவர்க்குப் பிறவித்துன்பத்தினின்றும் உய்தி
அடையும் உபாயம் இல்லை என்று தெளிந்து, திருவாரூர்த் தியாகராசப்
பெருமான் திருவடியே கதி எனப்பற்றிக் கொண்டாய். ஆரூர் தொழுது
உய்யலாம் மையல் கொண்டாய். ‘தந்தையார் தாயாருடன் பிறந்தார், தாரமார்
புத்திரரார்தாந்தாமாரே, வந்தவாறெங்ஙனே போமாறேதோமாயமா மிதற்கேது
மகிழவேண்டா, சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின், திகழ்மதியும்
வாளரவுந் திளைக்குஞ்சென்னி யெந்தையார் திருநாம நமச்சிவாய
வென்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்கலாமே’. ‘உடலைத் துறந்து உல