பக்கம் எண் :

857

வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி
     கண்டத் தெண்டோள்
அடிகளா ரூர்தொழு துய்யலா மையல்கொண்
     டஞ்ச னெஞ்சே.
                  10
2334.







பல்லிதழ் மாதவி யல்லிவண் டியாழ்செயுங்
     காழி யூரன்
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்
     பந்த னாரூர்
எல்லியம் போதெரி யாடுமெம் மீசனை
     யேத்து பாடல்
சொல்லவே வல்லவர் நீதிலா ரோதநீர்
     வைய கத்தே.                     11

திருச்சிற்றம்பலம்


கேழுங் கடந்து உலவாத துன்பக் கடலைக் கடந்து உய்யப் போயிடலாகும்
............சுடலைப் பொடிக் கடவுட்கு அடிமைக்கண் துணிநெஞ்சமே’. (தி.6 ப.93
பா.10) (தி.4 ப.112. பா.2)

     10. பொ-ரை: நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி
உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்னவடிவெடுத்துப் பறந்து சென்றும்
இன்றுவரை தேடிக் காணாத நிலையில் தன்மையால் உயர்ந்தவரும், பவளம்
போன்ற உருவினரும் இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக்
கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணிபோன்ற
அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய
ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!

     கு-ரை: நெடியமால் மண் (பூமியை) இடந்தான்-பேர்த்தான் பிரமன்
(வானில் உயர) நீண்டான் பறந்தான். நீண்டுஇடந்து இன்னம் நேடிக்
காணாப்படியனார் என்க.

     படி-பண்பு. உருவம் எனில் ஈண்டுத் தீப்பிழம்புருவம் ஆகும்.
‘இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதிக்
காட்டொணாதே’ (தி.6 ப.97 பா.10) என்பதில்