காட்சிக்குரியது எனல்
உணர்க. பாகவடிவு-அர்த்தநாரீச் சுரரூபம்மணி-
நீலரத்நம்.
11. பொ-ரை:
பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக
இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப்
பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லிவருபவனும் ஆகிய
ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில்
எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச்
சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில்
தீதிலர்.
கு-ரை:
யாழ்-யாழொலியை நல்லவே நல்லவே என்ற அடுக்கும்
ஏகாரமும் ஆசிரியர் திருவாய் மலர்ச்சியின் எய்தும் ஆன் மலாபத்தை
உறுதிப்படுத்தி நின்றன. ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீயவழுக்கியும்
வாயாற்சொலல் (குறள். 139) என்றதனுரையில் பரிமேலழகர் எழுதிய
தாற்பரியம் ஈண்டுக் கருதற்பாலது.
எல்லியம்போது-இரவு.
ஓதம்-கடல். வையகத்தே பாடல் சொல்ல
வல்லவர் தீது இலர் என்க. இத்திருப்பதிகம் நித்தியபாராயணத்திற்
குரியனவற்றுள் ஒன்றாகும்.
திருஞானசம்பந்தர்
புராணம்
புவனவா ரூரினிற்
புறம்புபோந் ததனையே
நோக்கி நின்றே
அவமிலா நெஞ்சமே அஞ்சல்நீ உய்யுமா
றறிதி அன்றே
சிவனதா ரூர்தொழாய் நீமற வாதென்று
செங்கை கூப்பிப்
பவனமாய்ச் சோடையாய் எனுந்திருப் பதிகமுன்
பாடி னாரே.
-சேக்கிழார்.
|
|