பக்கம் எண் :

860

2336.







மங்கைமணந்த மார்பர்
     மழுவாள்வலனொன் றேந்திக்
கங்கைசடையிற் கரந்தார்
     கடவூர்மயான மமர்ந்தார்
செங்கண்வெள்ளே றேறிச்
     செல்வஞ்செய்யா வருவார்
அங்கையேறிய மறியார்
     அவரெம்பெருமா னடிகளே.      2
2337.







ஈடலிடப மிசைய
     வேறிமழுவொன் றேந்திக்
காடதிடமா வுடையார்
     கடவூர்மயான மமர்ந்தார்
பாடலிசைகொள் கருவி
     படுதம்பலவும் பயில்வார்
ஆடலரவ முடையார்
     அவரெம்பெருமா னடிகளே.      3


     2. பொ-ரை: உமையம்மையை ஒருபாகமாகக் கொண்ட மார்பினர்.
மழுவாகிய வாள் ஒன்றை வலக்கரத்தில் ஏந்தியவர். கங்கையைச் சடையின்
மீது மறைத்துள்ளவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். சிவந்த
கண்களை உடைய வெள்ஏற்றில் ஏறிச் செல்வர் போல் அருட்காட்சி
தருபவர். அழகிய கையில் மானை ஏந்தியவர். அவர் எம் பெருமானாராகிய
அடிகள் ஆவார்.

     கு-ரை: மங்கை மணந்த மார்பர்-உமாதேவியாரை இடப்பால்
உடையவர். மார்பு இடப்பக்கத்தது. ‘போகமார்த்த பூண் முலையாள்
தன்னோடும் பொன்னகலம் பாகமார்த்த. . . அண்ணல்’ வலன்-வலக்
கையில். கரந்தார்-மறைத்தார். செல்வம்-அடியார்கட்குத் திருவருட் காட்சி
கிடைக்கும் பாக்கியம். செய்யா-செய்து. மறி-மான்கன்று. (பா.5) அதை
ஏந்தியதால் அங்கை ஏறிய மறியார் என்றார்.

     3. பொ-ரை: ஒப்பற்ற இடபத்தின் மேல் ஏறி, மழு ஒன்றை ஏந்தி,
சுடுகாட்டை இடமாகக் கொண்டவர். அவர், கடவூர் மயானத்தில்
எழுந்தருளியுள்ளார். பாடல் இசைக்கருவிகளோடு கூத்தாடுதல் பலவற்றையும்
புரிபவர்; ஆடும் பாம்பை அணிகலனாக உடையவர். அவர் எம் பெருமான்
அடிகள் ஆவார்.