2338.
|
இறைநின்
றிலங்கு வளையா
ளிளையாளொருபா லுடையார்
மறைநின் றிலங்கு மொழியார்
மலையார்மனத்தின் மிசையார்
கறைநின் றிலங்கு பொழில்சூழ்
கடவூர்மயான மமர்ந்தார்
பிறைநின் றிலங்கு சடையார்
அவரெம்பெருமா னடிகளே. 4 |
2339.
|
வெள்ளையெருத்தின்
மிசையார்
விரிதோடொருகா திலங்கத்
துள்ளுமிளமான் மறியார்
சுடர்பொற்சடைகள் துளங்கக் |
கு-ரை:
ஈடு + அல் = ஈடல். தன்னொடு பிறிதொன்று ஒப்பு அல்லாத
இடபம். காடது இடமாக உடையவர். பாடல் இசை-பாடுதலில் இசை. படுதம்
-கூத்து. பாகம் உமையோடாகப் படிதம் பல பாட (பதி.198 பா.4) என்பதில்
படிதம் என்றுள்ளதறிக.
4. பொ-ரை:
முன் கையில் நின்று விளங்கும் வளையல்களை
அணிந்த இளமைத் தன்மை உடைய உமையம்மையை ஒருபாகமாகக்
உடையவர். வேத வசனங்கள் திகழும் மொழியினை உடையவர். தெளிந்த
ஞானிகளின் மனத்தின்கண் வந்து தங்குபவர். கருமை விளங்கும் பொழில்
சூழ்ந்த கடவூர் மயானத்தே எழுந்தருளியிருப்பவர். பிறை விளங்கும்
சடைமுடியினர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
கு-ரை:
இறை-முன்கை. வளையாள்-வளையலையுடையவள்.
இளையாள்-தேவியாரைக் குறித்தவை. மறை . . . மொழி யார்-
வேதவாக்கியப் பொருளாயுள்ளவர். மலையார்-மலைத்தல் இல்லாதவர்,
தெளிந்தவர், அவர் மனத்தின் மிசையார். மனம் ஊர்தி சிவபிரான்-ஊர்பவர்.
அன்பர் மனமாங்குதிரை. கறை-கறுப்பு நிறம். மரச்செறிவால் இருள்மிக்க
சோலை.
5. பொ-ரை:
வெண்மை நிறமுடைய எருதின் மேல் வருபவர்.
ஒளிவிரியும் தோடு ஒருகாதில் விளங்க, துள்ளும் இளமான் கன்றைக் கையில்
ஏந்தியவர். ஒளிவிடும் பொன்னிறமான சடை விளங்க 132
|