பக்கம் எண் :

862

கள்ளநகுவெண் டலையார்
 
    கடவூர்மயான மமர்ந்தார்
பிள்ளைமதிய முடையார்
 
    அவரெம்பெருமா னடிகளே.    5
2340.







பொன்றாதுதிரு மணங்கொள்
     புனைபூங்கொன்றை புனைந்தார்
ஒன்றாவெள்ளே றுயர்த்த
     துடையாரதுவே யூர்வார்
கன்றாவினஞ்சூழ் புறவிற்
     கடவூர்மயான மமர்ந்தார்
பின்றாழ்சடைய ரொருவர்
     அவரெம்பெருமா னடிகளே.     6


அதன்மிசைக் கள்ளமாக நகும் வெண்மையான தலைமாலையைச் சூடியவர்.
கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். இளம்பிறையைச் சூடியவர்.
அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவர்.

     கு-ரை: ஒளிவிரியும் தோடு ஒருகாதிலும், குழை ஒருகாதிலும் விளங்க.
மான்மறி (பா.2.) துலங்க-ஒளிசெய்ய. பிள்ளை மதியம்-இளம்பிறை.

     6. பொ-ரை: பொன்னிறமான மகரந்தம் உதிரும் மணம்
பொருந்திய அழகிய கொன்றைமாலையை அணிந்தவர். சிறப்புடைய
வெள்ளேற்றினைக் கொடியாக உயர்த்தவர். அதனையே ஊர்தியாகவும்
கொண்டவர். கன்றுகளோடு கூடிய பசுக்கள் மேயும் காடுகளை உடைய
கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். பின்னால் தாழ்ந்து தொங்கும்
சடைமுடியினை உடையவர். ஒப்பற்றவர். அவர் பெருமானாராகிய அடிகள்
ஆவார்.

     கு-ரை: பொன்தாது உதிரும் கொன்றை, மணம்கொள் கொன்றை.
புனைகொன்றை. பூங்கொன்றை என்று இயைத்துக் கொள்க. புனை-
அழகுசெய்யும். புனைந்தார்-அணிந்தார். வெள்ளேறு-வெளியவிடை. ஒன்றா-
ஒன்றாக, சிறப்புடையதாக. உயர்த்தது-தூக்கியது. அதுவே அவ்விடையே.
கன்று ஆ இனம்-கன்றுகளையுடைய பசுக்கூட்டம். புறவு-காடு.