2342.
|
செற்றவரக்க
னலறத்
திகழ்சேவடிமெல் விரலாற்
கற்குன்றடர்த்த பெருமான்
கடவூர்மயான மமர்ந்தார்
மற்றொன்றிணையில் வலிய
மாசில் வெள்ளி மலைபோல்
பெற்றொன்றேறி வருவார்
அவரெம்பெருமா னடிகளே. 8 |
2343.
|
வருமாகரியி
னுரியார்
வளர்புன்சடையார் விடையார்
கருமானுரிதோ லுடையார்
கடவூர்மயான மமர்ந்தார்
திருமாலொடுநான் முகனுந்
தேர்ந்துங்காணமுன் னொண்ணாப்
பெருமானெனவும் வருவார்
அவரெம்பெருமா னடிகளே. 9 |
8. பொ-ரை:
சினம் மிக்க இராவணன் அலறுமாறு, விளங்கும் தம்
சேவடி விரலால் கயிலைமலையின் கீழ் அவனை அகப்படுத்தி அடர்த்தவர்.
கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். உவமையாகச் சொல்லுவதற்கு
வேறொரு பொருள் இல்லாத குற்றமற்ற வெள்ளிமலை போன்ற விடைமீது
ஏறி வருபவர். அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.
கு-ரை:
செற்ற-கோபத்தையுடைய. கற்குன்று-கயிலைமலை. மற்று
ஒன்று இணை இல்லாத வலிய மாசு (-குற்றம்) இல்லாத வெள்ளி மலை
போலும் பெற்று (-எருது) ஒன்று ஏறிவருவார் என்க. பெற்றம்-பெற்று என்று
நின்றது.
9. பொ-ரை:
தம்மைக் கொல்ல வந்த பெரிய யானையின் தோலை
உரித்துப் போர்த்தவர். நீண்டு வளர்ந்த மென்மையான சடையினை
உடையவர். விடை ஊர்தியை உடையவர். கரிய மானின் தோலை உடையாக
அணிந்தவர். கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவர். திருமாலும்
நான்முகனும் தேடியும் காண ஒண்ணாத
|