பக்கம் எண் :

865

2344.







தூயவிடைமேல் வருவார்
     துன்னாருடைய மதில்கள்
காயவேவச் செற்றார்
     கடவூர்மயான மமர்ந்தார்
தீயகருமஞ் சொல்லுஞ்
     சிறுபுன்றேர ரமணர்
பேய்பேயென்ன வருவார்
     அவரெம்பெருமா னடிகளே.   10
2345.

மரவம்பொழில்சூழ் கடவூர்
     மன்னுமயான மமர்ந்த
அரவமசைத்த பெருமா
     னகலமறிய லாகப்


பெருமான் எனவும் பேசுமாறு வருபவர். அவர் எம்பெருமானாராகிய
அடிகள் ஆவார்.

     கு-ரை: மான் உரி்தோல் - மானை உரித்த தோல் ‘மானினது 
உரியாகிய தோல்’ எனலுமாம். முன்னது வினைத்தொகை. பின்னது
பண்புத்தொகையாதல்உரித்தோல் என்று நிற்புழி. ஒண்ணா-ஒன்றாத. மரூஉ.
கன்று-கண்ணு மூன்று-மூணு முதலியவைபோல.

     10. பொ-ரை: தூய விடைமீது வருபவர். பகைவர் தம் முப்
புரங்களும் காய்ந்து வேகுமாறு சினந்தவர். கடவூர் மயனத்தில்
எழுந்தருளியிருப்பவர். தீய செயல்களைச் செய்யுமாறு சொல்லும்
சிறுமையாளராகிய தேரர் அமணர்கள் தம்மைப் பேய் என்று பயந்து
ஒதுங்க வருபவர். அவர் எம் பெருமான் அடிகள் ஆவார்.

     கு-ரை: துன்னார்-பகைவர். செற்றார்-கோபித்தார். தீய கருமம்-கெட்ட
செயல்கள். இறையை, ‘பேய் பேய்’ என்பார் தேரரும் அமணரும், சிறுமை
புன்மை இரண்டும் பொது அடை. தீயகருமஞ் செய்தல் சிறுமை. சொல்லுதல்
புன்மை ‘சிறுமை யுறுபசெய்பறியலரே’ (நற்றிணை,1)

     11. பொ-ரை: குங்கும மரங்கள் செறிந்த பொழில் சூழ்ந்த கடவூரை
அடுத்த மயானத்தில் விளங்கும், அரவணிந்த பெருமானின்