பக்கம் எண் :

866

பரவுமுறையே பயிலும்
     பந்தன்செஞ்சொன் மாலை
இரவும்பகலும் பரவி
     நினைவார்வினைக ளிலரே.      11

                 திருச்சிற்றம்பலம்


பெருமைகள் முழுவதையும் அறியலாகாதெனினும் இயன்றவரை கூறிப்
பரவுமாறு ஞானசம்பந்தன் சொல்லும் இப்பதிகச் செஞ்சொல் மாலையை
இரவும் பகலும் ஓதிப்பரவி நினைபவர் வினைகள் இலராவர்.

     கு-ரை: மரவம்-குங்குமமரம். அசைத்த-கட்டிய. அகலம்-வியாபகம்.
அறியல் ஆக-அறிவது இசையும்படி. பரவுமுறையே பயிலுதல் ஆசிரியர்க்கே
இருந்ததெனின், நம்மனோர்க்கு அதன் இன்றியமையாமை கூறல்
வேண்டுமோ?

       திருஞானசம்பந்தர் புராணம்

பரவி ஏத்திஅங் கரிதினிற் போந்துபார்
     பரவுசீர் அரசோடு
விரவு நண்புடைக் குங்குலி யப்பெருங்
     கலயர்தம் மனைமேவிக்
கரையில் காதல்மற் றவர்அமைத் தருளிய
     விருந்தினி தமர்ந்தங்குச்
சிரபு ரத்தவர் திருமயா னமும்பணிந்
     திருந்தனர் சிறப்பெய்தி.

                          -சேக்கிழார்.