|
சுடுகாடு
மேவினீர்
துன்னம்பெய்
கோவணந்தோல்
உடையாடை யதுகொண்டீ
ருமையாளை
யொருபாகம்
அடையாள மதுகொண்டீ
ரங்கையினிற்
பரசுவெனும்
படையாள்வீர் வேணுபுரம்
பதியாகக்
கொண்டீரே. 2 |
2348.
|
கங்கைசேர்
சடைமுடியீர்
காலனைமுன்
செற்றுகந்தீர்
திங்களோ டிளவரவந்
திகழ்சென்னி
வைத்துகந்தீர் |
(தி.5 ப.39 பா.3)
மண்ணினார் ஏத்த வானுளார் பரச அந்தரத்து
அமரர்கள் போற்றப் பண்ணினார் எல்லாம் (தி.3 ப.118 பா.4)
தாரன்மாலையன் தண்ணறுங்கண்ணியன் (தி.5 பதி.12 பா.7) என்பதால்
இருபாலும் ஒவ்வொரு பூவைத்துத் தொடுக்கும் தார், ஒருபால் காம்பும்
ஒருபால் மலரும் அமையத்தொடுக்கும் கண்ணிக்கும், பன்மலர் மாலைக்கும்
வேறுபட்டது எனல் விளங்கும். ஓதம்-கடல்.
2. பொ-ரை:
சுடுகாட்டில் எழுந்தருளியிருப்பவரே, நைந்த
கோவணத்துடன் புலித்தோலை உடுத்தும் ஆடையாகக் கொண்டவரே,
அருள்வழங்கும் அடையாளமாக உமையம்மையை ஒருபாகமாகக்
கொண்டவரே, அழகிய கையில் மழுப்படையை உடையவரே, நீர்
வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டுள்ளீர்.
கு-ரை:
துன்னம்-துளைத்தல், தைத்தல், கோவணம் தோல்
உடையாடையத- புலிகள் கோவணங்களுடை ஆடையாக உடையான்
(பதி.219 பா.6) அங்கை-அகங்கை, உள்ளங்கை, அழகிய கையும் ஆம்.
பரசு எனும் படை-மழு என்னும் ஆயுதம்.
3. பொ-ரை:
கங்கையணிந்த சடைமுடியை உடையவரே காலனைச்
செற்றுப்பின் உகந்து அருள் செய்தவரே, திங்களையும் பாம்பையும் பகை
நீக்கித்திகழும் முடிமீது வைத்து மகிழ்பவரே, உமையம்மையை ஒருகூறாக
உடையவரே, நீர் மறைவல்ல அந்தணர்கள் நிறைந்து ஏத்தத் தாமரை பூத்த
தடாகங்களும் வயல்களும் சூழ்ந்த வேணுபுரத்தைப் பதியாகக்
கொண்டுள்ளீர்.
|