பக்கம் எண் :

869

மங்கையோர் கூறுடையீர்
     மறையோர்க ணிறைந்தேத்தப்
பங்கயஞ்சேர் வேணுபுரம்
     பதியாகக் கொண்டீரே.         3
2349.







நீர்கொண்ட சடைமுடிமே
     னீண்மதியம் பாம்பினொடும்
ஏர்கொண்ட கொன்றையினோ
     டெழின்மத்த மிலங்கவே
சீர்கொண்ட மாளிகைமேற்
     சேயிழையார் வாழ்த்துரைப்பக்
கார்கொண்ட வேணுபுரம்
     பதியாகக் கலந்தீரே.           4
2350.



ஆலைசேர் தண்கழனி
     யழகாக நறவுண்டு
சோலைசேர் வண்டினங்க
     ளிசைபாடத் தூமொழியார்


     கு-ரை: செற்று-அழித்து. அரவம்-பாம்பு. சென்னி-தலை. பங்கயம்-
தாமரை.

     4. பொ-ரை: கங்கையணிந்த சடைமுடிமேல் இருமுனையாக நீண்ட
பிறை, பாம்பு, அழகிய கொன்றை மலர், எழிலுடைய ஊமத்தை மலர்
ஆகியன இலங்க, நீர் அணிகலன் புனைந்த மகளிர் மாளிகைகளின்மேல்
ஏறி வாழ்த்த மேகம் தவழும் மூங்கிலைத் தலமரமாகக் கொண்ட
வேணுபுரத்தைப் பதியாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.

     கு-ரை: நீர்-கங்கைநீர். அபிடேக நீரும் ஆம் மதியம் பிறை. மத்தம் -
ஊமத்தை. மாளிகை-நகரிலுள்ள உயரிய வீடுகளும் தோணியப்பர்
மலைக்கோயிலும் ஆம். கார்கொண்ட வேணுபுரம் என்றதனால் மூங்கிலின்
உயர்ச்சி விளங்கும்.

     5. பொ-ரை: கரும்பாலைகளைக் கொண்ட தண்ணிய கழனிகளை
உடையதும், சோலைகளில் வண்டுகள் தேனுண்டு இசை பாடி மகிழ்விப்பதும்,
காலை நேரங்களில் இனிய மொழிகள் பேச்சுமகளிர் ஆலயம் வந்து
கைகூப்பித் தொழ, பாலையாழ் ஒலிக்கும் சிறப்பினது