பக்கம் எண் :

870

காலையே புகுந்திறைஞ்சிக்
     கைதொழமெய் மாதினொடும்
பாலையாழ் வேணுபுரம்
     பதியாகக் கொண்டீரே.      5
2351.







மணிமல்கு மால்வரைமேன்
     மாதினொடு மகிழ்ந்திருந்தீர்
துணிமல்கு கோவணத்தீர்
     சுடுகாட்டி லாட்டுகந்தீர்
பணிமல்கு மறையோர்கள்
     பரிந்திறைஞ்ச வேணுபுரத்
தணிமல்கு கோயிலே
     கோயிலாக வமர்ந்தீரே.      6


மாகிய வேணுபுரத்தை நீர் உமையம்மையோடு கூடிய திருமேனியராய்
எழுந்தருளும் பதியாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: ஆலை-கரும்பாலை, கரும்பு. நறவு-தேன், தூ-தூய்மை.
‘காலையே........கைதொழ’:- என்றதால் பண்டு மகளிர் நாள்தோறும் காலையில்
தவறாமல் கோயிலுக்குச் சென்று வழிபட்ட உண்மைபுலப்படுகின்றது.
பாலையாழ்:- நாற்பெரும் பண்ணுள் ஒன்று, பாலையாழ். ‘அராகம் நோந்திறம்
உறுப்புக் குறுங்கலி ஆசான் ஐந்தும் பாலையாழ்த்திறனே’ என்பது
பிங்கலந்தை-1381. நோந்திறத் தின் மறுதலை செந்திறம். ‘கைக்கிளை
செந்திறம்பெருந்திணை நோந் திறம்’ தொல். அகத்.55 உரை இளம்பூரணம்.

     6. பொ-ரை: மணிகள் பதித்த பெரிய திருத்தோணிமலை மீது
உமையம்மை யோடு மகிழ்ந்து உறைபவரே, கிழித்த கோவண ஆடையை
உடுத்தவரே, சுடுகாட்டில் ஆடுவதை மகிழ்வாகக் கொள்பவரே, நீர்
தொண்டில் விருப்புடைய அந்தணர்கள் அன்புடன் வணங்க வேணுபுரத்தில்
விளங்கும் தண்மை மிக்க கோயிலே நுமக் குரிய கோயில் எனக் கொண்டு
அமர்ந்துள்ளீர்.

     கு-ரை: ‘மணிமல்கு.........இருந்தீர்’ தோணிபுரம் எனப்படும்
மலைக்கோயிலில் அம்மையப்பராக வீற்றிருந்தீர். அக்கோயில் ‘நாலைந்து
புள்ளினம் ஏந்தின’ (தி.4 ப.82 பா.1) அமைப்புடை யது. துணி-துண்டு.
ஆட்டு-கூத்து. பரிந்து- அன்புகொண்டு.