2354.
|
தீயோம்பு
மறைவாணர்க்
காதியாந் திசைமுகன்மால்
போயோங்கி யிழிந்தாரும்
போற்றரிய திருவடியீர்
பாயோங்கு மரக்கலங்கள்
படுதிரையான் மொத்துண்டு
சேயோங்கு வேணுபுரஞ்
செழும்பதியாத் திகழ்ந்தீரே. 9 |
2355.
|
நிலையார்ந்த
வுண்டியினர்
நெடுங்குண்டர் சாக்கியர்கள்
புனலயானா ரறவுரையைப்
போற்றாதுன் பொன்னடியே |
கு-ரை:
மண்டி-மேற்சென்று, நெருங்கியும் ஆம். விரை-நறுமணம்.
கவின்-அழகு. ஓதம்-நீர். எற்றும்-மோதும்.
9. பொ-ரை:
முத்தீயோம்பும் அந்தணர்கட்கு முதல்வனாகிய பிரமன்,
திருமால் ஆகியோர் வானில்பறந்தும், நிலத்தை அகழ்ந்தும் காணுதற்கு
அரிய திருமுடி திருவடிகளை உடையவரே!, நீர், அலைகளால் மோதப்
பெறும் பாய்மரக்கலங்களைக் கொண்ட கடலை அடுத்துள்ளதும் நீண்டு
வளர்ந்த மூங்கிலைத்தலமரமாகக் கொண்டுள்ளதுமாகிய வேணுபுரத்தையே
நுமக்குரிய வளமையான பதியாகக் கொண்டு விளங்குகின்றீர்.
கு-ரை:
தீயோம்பு. . . . முகன் - பிராமணர்க்கு முதல்வன் பிரமன்
என்னும் உண்மை உணர்த்தப்பட்டது. மால்-திருமால், ஓங்குதல்-பிரமன்
செயல். இழிதல்-மால்வினை. போற்ற அரிய திருவடி எனத் திருவடிச்சிறப்பு
உணர்த்தப்பட்டது. பாய். . . . . வேணுபுரம்- பண்டு சீகாழியில் மரக்கலங்கள்
(கடற்றுறையுள்) இருந்தமை தெளிவாகும். சேய். . . . புரம்- விண்ணில்
ஓங்கிய உயர்ச்சியைக் குறிப்பது.
10. பொ-ரை:
பெருமானே! நீர், நின்றுண்ணும் இயல்பினராய இழிந்த
சமணர்கள் சாக்கியர்கள் கூறும் அறிவுரைகளைப் பொருட் படுத்தாது உம்
பொன்னடிகளை விரும்பி நீயே சரண் என்று
|